இந்தியாவின் முன்னணி உணவு சேவை நிறுவனங்களான தேவ்யானி இன்டர்நேஷனல் மற்றும் சபையர் ஃபுட்ஸ் தங்களுடைய வர்த்தகம், கடைகளை இணைப்பதாக அறிவித்துள்ளன. இந்த இணைப்பு மூலம் உலகளவில் பிரபலமாக விளங்கும் YUM! பிராண்ட்ஸின் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக தேவ்யானி இன்டர்நேஷனல் உருவாக்கும்.
இந்த அறிவிப்பால் ஜனவரி 2 வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தேவ்யானி பங்குகள் 7.8 சதவீதம் உயர்ந்து ரூ.159.45 வரை சென்றது. இதேவேளையில் சபையர் ஃபுட்ஸ் பங்குகள் 3.22 ரூபாய் சரிந்து 253.70 ரூபாய்க்கு குறைந்துள்ளது.

இந்த மாபெரும் இணைப்பு நாட்டின் QSR பிரிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் மொத்த பீட்சா ஹட் மற்றும் KFC வர்த்தகம் தற்போது தேவ்யானி இன்டர்நேஷனல் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. இதனால் பெரும் ஆதிக்கத்தை பெறும்.
இந்த இணைப்பு அறிவிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளித்தது என்பது இன்றைய பங்கு விலை உயர்வை பார்க்கும்போதே தெரிகிறது.
மேலும் இந்த இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது, இதன் மூலம் மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட கடைகள் இனி தேவ்யானி இன்டர்நேஷனல் கீழ் இயங்கும்.
இந்த இணைப்புக்கு இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களும் இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த இணைப்பை பங்கு பரிமாற்றம் மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ள காரணத்தால் சபையர் ஃபுட்ஸ் பங்குதாரர்கள் வைத்திருக்கும்100 பங்குகளுக்கு 177 தேவ்யானி பங்குகள் அளிக்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இரு நிறுவனங்களின் இணைப்புக்கு அதன் நிர்வாக குழு மட்டும் ஒப்புதல் அளித்தால் போதாது, இந்த இணைப்பு ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், போட்டி ஆணையம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களின் அனுமதி தேவை. இதன் மூலம் இந்த இணைப்பு பணிகள் அடுத்த 12 முதல் 15 மாதங்களில் நிறைவேறும்.
தேவ்யானி இன்டர்நேஷனல் KFC, பீட்சா ஹட் போன்ற பிராண்ட்களை இயக்குகிறது, 280 நகரங்களில் 2,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தியா தவிர தாய்லாந்து, நைஜீரியா, நேபால் ஆகிய நாடுகளிலும் செயல்படுகிறது. மேலும் இந்நிறுவனத்திடம் கோஸ்டா காஃபி, டீ லைவ், நியூ யார்க் ஃப்ரைஸ், சனூக் கிச்சன் போன்ற பிராண்ட்களின் இந்திய உரிமை உள்ளது. உள்நாட்டு பிராண்ட்களான வாங்கோ, தி ஃபுட் ஸ்ட்ரீட், பிரியாணி பை கிலோ, கோய்லா பட்டர் சிக்கன் ஆகியவையும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய பிராண்டுகளாகும்.
தேவ்யானி நிறுவனம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ரவி ஜெய்பூரியாவுக்கு சொந்தமானது, அவர் RJ கார்ப்பின் தலைவராக உள்ளார். இந்த ஆர்ஜே கார்ப் தான் பெப்ஸிகோவின் பாட்லிங் பார்ட்னரான வருன் பெவரேஜஸ் இயங்குகிறது.
சபையர் ஃபுட்ஸ் 2015 இல் சமரா கேபிடல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது, YUM! பிராண்ட்ஸின் உரிமைக்காக இயங்குகிறது. இந்தியா, இலங்கை, மாலத்தீவுகளில் KFC, பீட்சா ஹட், டாகோ பெல் போன்றவற்றை இயக்குகிறது, 1,000க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications