இந்தியாவில் சாமானிய மக்களுக்கு ஒரு பண தேவை என்றால் உடனடியாக அவர்கள் நாடக்கூடிய ஒரு விஷயம் தங்க நகைக்கடன் தான். தங்கள் வீட்டில் இருக்கும் நகையை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் வைத்து அடகு வைத்து கடன் வாங்கி பின்னர் அதனை மீட்டுக் கொள்வார்கள்.
ஆனால் இவ்வாறு நகை கடன் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக கூறி இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதன்படி நகை கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன. இதனால் நகை கடன் வழங்குவதில் தாமதமாகும் என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

நகை கடன் விதிகளை கடுமையாக்கினால் சாமானிய மக்கள் தங்க நகை கடன் வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் பலரும் கூறி வருகின்றனர். ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கியின் தங்க நகை கடன் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்திருக்கிறது.
இதனை அடுத்து சிறு நகை கடை வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்கையை தளர்த்துமாறு மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படக்கூடிய மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியின் நகை கடன் கொள்கையை ஆய்வு செய்து சிறு தங்க கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில தளர்வுகளை கொண்டு வரலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.
மேலும் புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துவது கடினம் என்பதால் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய நிதி அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. சிறு தொகையை கடனாக வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என பரிந்துரை செய்துள்ள மத்திய நிதி அமைச்சகம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என கூறியுள்ளது.
இதன் மூலம் அவர்களுக்கு விரைவாக கடன் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மத்திய அரசின் இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், பொதுமக்கள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து தங்க நகை கடன் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications