தங்கம் வாங்கணுமா? 10 நிமிடத்தில் ஹோம் டெலிவரி.. களத்தில் இறங்கிய ஸ்விக்கி, சோமேட்டோ..!

அக்டோபர் 29-ஆம் தேதி அன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், செல்வ வளம் பெருகவும், துரதிருஷ்டங்களைத் தவிர்க்கவும் பலர் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை வாங்குகின்றனர். இந்த ஆண்டு, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், சொமேட்டோவின் பிளிங்கிட், டாடாவின் பிக்பாஸ்கெட் மற்றும் செப்டோ போன்ற ஆன்லைன் கிராசரி தளங்கள், வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை 10 நிமிடங்களில் வீட்டுக்கு டெலிவரி செய்யும் சேவையை வழங்குகின்றன.

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற மின்னும் பொருட்களை வாங்குவதற்கான அதிர்ஷ்டமான மற்றும் சிறந்த நாட்களில் ஒன்றாக தன்தேராஸ் கருதப்படுகிறது. இந்த நாளில், மக்கள் பித்தளை, வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள், கார், வீடு போன்றவற்றை வாங்குகின்றனர். ஏனெனில் அவ்வாறு செய்வது அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் கண் திருஷ்டியில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

தங்கம் வாங்கணுமா? 10 நிமிடத்தில் ஹோம் டெலிவரி.. களத்தில் இறங்கிய ஸ்விக்கி, சோமேட்டோ..!

இந்த சேவையை வழங்குவதற்காக பிளிங்கிட் ஜோயாலுக்காஸ் மற்றும் மலபார் கோல்ட் & டயமண்ட்ஸுடன் இணைந்துள்ளது. செப்டோ மலபார் கோல்டு & டயமண்ட்ஸ் மற்றும் ஆக்மொன்ட் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நெக் பை ஜார், முத்துட் எக்ஸிம் மற்றும் மலபார் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, பிக்பாஸ்கெட் டாடாவுக்கு சொந்தமான நகை நிறுவனமான தனிஷ்க் உடன் இணைந்துள்ளது.

நீங்கள் என்ன வாங்கலாம்?:

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்: ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில், நீங்கள் 24 கேரட் தங்க நாணயங்களை 0.1g, 0.5g, 0.25g மற்றும் 1g ஆகிய எடையிலும், முத்துட் எக்ஸிம் 24K தங்க நாணயம் (1g) மற்றும் பிற வெள்ளி பொருட்கள், மலபார் 24K தங்க நாணயம் (1g) மற்றும் வெள்ளி நாணயங்களை (5g, 11.66g, 20g) வாங்கலாம்.

பிளிங்கிட்டில், நீங்கள் மலபாரின் 24K லட்சுமி தேவி தங்க நாணயம் (1 கிராம்), மலபாரின் 24K லக்ஷ்மி ரோஸ் தங்க நாணயம் (0.5 கிராம்), மற்றும் மலபாரின் 99.9% தூய தங்கத்தால் செய்யப்பட்ட லக்ஷ்மி கணேஷ் வெள்ளி நாணயம் (10 கிராம்) ஆகியவற்றை வாங்கலாம். மேலும், ஜோயாலுக்காஸ் 99.9% தூய லக்ஷ்மி கணேஷ் வெள்ளி நாணயம் (10 கிராம்), ஜோயாலுக்காஸ் 24K லக்ஷ்மி கணேஷ் தங்க நாணயம் (0.5 கிராம் மற்றும் 1 கிராம்) ஆகியவற்றையும் வாங்கலாம்.

பிக்பாஸ்கெட்டில், தனிஷ்க்கின் லட்சுமி கணேஷ் வெள்ளி நாணயம் (10 கிராம்), தனிஷ்க் 22 காரட் தங்க நாணயம் (1 கிராம்), மற்றும்/அல்லது லட்சுமி மோட்டிஃப் (1 கிராம்) கொண்ட தனிஷ்க் 22 காரட் தங்க நாணயம் ஆகியவற்றை வாங்கலாம்.

செப்டோவில் மலபாரின் 24K ரோஸ் தங்க நாணயம் (0.5 கிராம்), மலபாரின் 24K லக்ஷ்மி தங்க நாணயம் (1 கிராம்), மற்றும் மலபாரின் 999 தூய லக்ஷ்மி கணேஷ் வெள்ளி நாணயம் (10 கிராம்) ஆகியவற்றை வாங்கலாம்.

இந்த சலுகைகளில் உள்ள பொருட்கள் நகரத்திற்கு நகரம் மாறுபடலாம். எனவே முழு விவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் விருப்பமான அப்ளிகேஷனை பார்வையிடவும். இந்த சேவையை வழங்க ஆன்லைன் குவிக் காமர்ஸ் தலங்கள் பெரிய பெரிய நகை பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே நகையின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. மேலும் வீட்டிலிருந்தபடியே போக்குவரத்து செலவு செய்யாமல் பிடித்தமான நகைகளை இந்த தந்தேராஸ் பண்டிகைக்கு வாங்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+