தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.60,000 கோடி வர்த்தகம் நடைபெறவுள்ளதாக அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு (CAIT) கணித்துள்ளது. இன்று தந்தேராஸ் தினத்தில் நாடு முழுவதும் சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.2,500 கோடி மதிப்பிலான வெள்ளியும் விற்பனை செய்யப்பட உள்ளதாக, சாந்தி சௌக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், CAIT பொதுச் செயலாளருமான பிரவீன் கந்தல்வால் தெரிவித்துள்ளார்.
CAIT-இன் ஆல் இந்தியா ஜுவல்லர்ஸ் அண்ட் கோல்ட்ஸ்மித் கூட்டமைப்பின் (AIJGF) தேசியத் தலைவரான பங்கஜ் அரோரா, தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக தேவை இருப்பதாகக் கூறியுள்ளார். இருப்பினும், அதிக விலையின் காரணமாக எடை அடிப்படையில் குறைவான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும், விற்பனை அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளிக்கான டிமாண்ட்: இந்த ஆண்டு சுமார் 25 டன் தங்கம் நாடு முழுவதும் விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.20,000 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தோராயமாக 250 டன் வெள்ளி சுமார் ரூ.2500 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கூடுதலாக பழைய வெள்ளி நாணயங்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
டெல்லியில், சாந்தினி சௌக், தரிபா கலன், சதர் பஜார், கமலா நகர், அசோக் விஹார், மாடல் டவுன், பிடம்புரா, பஸ்சிம் விஹார், ரோகினி, ரஜோரி கார்டன், துவாரகா, ஜனக்புரி, தெற்கு விரிவாக்கம், கிரேட்டர் கைலாஷ், கிரீன் பார்க், லஜ்பத் நகர், கல்காஜி, ப்ரீத் விஹார், ஷாஹ்தாரா மற்றும் லக்ஷ்மி நகர் உள்ளிட்ட பிரபலமான சில்லறை சந்தைகளில் தந்தேராஸ் விற்பனை அதிகரித்தது.
தனத்ரயோதசி என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29-ஆம் தேதியான செவ்வாய் அன்று தொடங்கி இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த நாளில் குபேரன், லட்சுமி, தன்வந்திரி ஆகியோரை வணங்கி செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெற சிறப்பு பூஜைகளை செய்கின்றனர்.
இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பாத்திரங்கள், துடைப்பம் போன்ற பிற பொருட்களை வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
தந்தேராஸ் 2024: பஞ்சாங்கத்தின் படி கீழ்காணும் ஊர்களில் உள்ள மக்கள், இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பூஜை செய்து தங்கம் வாங்குவது செல்வ செழிப்பை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.
புனே: மாலை 07:01 முதல் 08:33 வரை
டெல்லி: மாலை 06:31 முதல் 08:13 வரை
சென்னை: மாலை 06:44 முதல் இரவு 08:11 மணி வரை
ஜெய்ப்பூர்: மாலை 06:40 முதல் இரவு 08:20 வரை
ஹைதராபாத்: மாலை 06:45 முதல் இரவு 08:15 மணி வரை
குர்கான்: மாலை 06:32 முதல் 08:14 வரை
சண்டிகர்: மாலை 06:29 முதல் 08:13 வரை
கொல்கத்தா: மாலை 05:57 முதல் 07:33 வரை
மும்பை: மாலை 07:04 முதல் 08:37 வரை
பெங்களூரு: மாலை 06:55 முதல் இரவு 08:22 வரை
அகமதாபாத்: மாலை 06:59 முதல் 08:35 வரை
நொய்டா: மாலை 06:31 முதல் 08:12 வரை
தந்தேராஸ் பண்டிகைக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியாதவர்கள் பாத்திரங்கள் லட்சுமி கணேஷா சிலைகள் போன்றவற்றையும் வாங்கலாம். மேலும் துடைப்பம் வாங்குவது தீய விஷயங்களை அகற்றும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. ஆனால் கூர்மையான பொருட்கள், கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றை வாங்கக்கூடாது. அதேபோல பிறரிடம் இருந்து பணம் வாங்கவோ அல்லது பணம் கொடுக்கவோ கூடாது. பிளாஸ்டிக் அல்லது உடைந்த பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications