தந்தேராஸ் 2024: கார் வாங்குவதற்கான நல்ல நேரம் இதுதான்! ஆனால் இந்த பொருட்களை மட்டும் வாங்கிடாதீங்க!

தந்தேராஸ் அல்லது தந்த்ரயோதசி என்பது மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. இந்த நாள் குபேரன் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபட சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, மற்ற ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்கள் போன்ற புதிய பொருட்களை வாங்குவதற்கு இந்த நாள் உகந்தது. தீபாவளி பண்டிகை தண்டேராஸுடன் துவங்கி, பாய் தூஜ் உடன் நிறைவுபெறுகிறது.

2024-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தந்தேராஸ் அல்லது தந்திரயோதசி விழா கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை போலவே ந்த்ரயோதசி அன்று தங்க நகைகளை வாங்குவது செல்வ செழிப்பை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் எந்தெந்த நேரங்களில் தந்திரயோதசி முகூர்த்தம் வருகிறது என்பது குறித்து பஞ்சாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது/ சென்னையில் மாலை 6:44 மணி முதல் இரவு 8.11 மணி வரையும் பெங்களூரில் 6.55 மணி முதல் 8.22 மணி வரையிலும் இந்த முகூர்த்த தினம் வருகிறது. அதே போல மும்பையில் 7:00 மணி முதல் 8.37 மணி வரையிலும் இந்த முகூர்த்த தினம் வருகிறது.

தந்தேராஸ் 2024: கார் வாங்குவதற்கான நல்ல நேரம் இதுதான்! ஆனால் இந்த பொருட்களை மட்டும் வாங்கிடாதீங்க!

தந்தேரஸ் 2024: எந்தெந்த பொருட்களை வாங்க வேண்டும்?:

தங்கம் மற்றும் வெள்ளி: தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்களை வாங்குவது செல்வம் மற்றும் செழிப்பைத் தருவதாக நம்பப்படுகிறது. எனவே தந்தேராஸ் தினத்தன்று மின்னும் பொருட்களை வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பாத்திரங்கள்: குறிப்பாக செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் செல்வ செழிப்பைக் குறிக்கின்றன. அப்படி பாத்திரங்களை வாங்கும் போது வீட்டிற்குள் காலி பாத்திரங்கள் அல்லது பானைகளை எடுத்து வராமல் தண்ணீரை நிரப்பி எடுத்து வர வேண்டும் என்று ஜோதிடர் நஸ்தா வர்மா கூறியுள்ளார்.

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேஜெட்கள்: தங்கம் மற்றும் வெள்ளி வாங்கவில்லை என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டு உபகரணங்களில் முதலீடு செய்யலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது உங்களுக்கு தேவைப்படும் கேஜெட்களை வாங்கிக் கொள்ளலாம்.

வாகனங்கள்: சிலர் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை தந்தேராஸ் தினத்தன்று வாங்குவதை அதிர்ஷ்டமான நாளாக கருதுகின்றனர்.

குடை: நிதி பற்றாக்குறையை வீட்டிலிருந்து அகற்றுவதை குறிக்கும் மலிவு விலையிலான குடையும் வாங்கிக் கொள்ளலாம்.

தன்தேரஸ் 2024: எந்தெந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்?:

எண்ணெய் அல்லது நெய்யின் குறைந்த பயன்பாடு: தந்தேராஸ் தினத்தன்று மக்கள் மெய் மற்றும் எண்ணெய் பயன்பாட்டை குறைந்தபட்சமாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

கருப்பு நிறப் பொருட்களைத் தவிர்க்கவும்: கருப்பு நிறப் பொருட்கள் துரதிர்ஷ்டமாகக் கருதப்படுகின்றன.

கண்ணாடி பொருட்கள்: கண்ணாடி பொருட்களையும் இந்த விழாவின் போது வாங்க கூடாது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

கூர்மையான பொருட்கள்: கத்திகள் மற்றும் கத்தரிக்கோல் போன்ற பொருட்கள் துரதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.

பரிசுகளை பரிமாறிக்கொள்வதை தவிர்க்கவும்: தன்தேரஸுக்கு ஒரு நாள் முன்பே பரிசுகளை வாங்குவது அல்லது கொடுப்பது நல்லது. அன்றைய தினம் பரிசுகளை பரிமாறக் கூடாது.

பணம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது: பணம் கொடுப்பதையோ கடன் பெறுவதையோ தவிர்க்கவும்.

பிளாஸ்டிக் அல்லது உடைந்த பொருட்களைத் தவிர்க்கவும்: இவை துரதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+