இன்றைய தினம் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளைய மறு தினம் தீபாவளி. எப்போதெல்லாம் பண்டிகை காலம் வருகிறதோ அப்போதெல்லாம் நகை விற்பனை சற்று அதிகமாக இருக்கும். தந்தேராஸ் பண்டிகையின் போது நகை வாங்குவது செல்வ செழிப்பை பெற்று தரும் என்பது நம்பிக்கை. இதனால் அன்றைய தினம் எல்லோரும் நகை வாங்குவார்கள். ஒருபுறம் நகை வாங்குவது முதலீடு என்று நினைத்துக் கொள்ளும் மக்களும் இருக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல.
தங்கத்தை அணிகலனாக அணிவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் முதலீட்டுக்காக வாங்கும் போது தங்க நகைகளாக வாங்காமல் மாற்று வழிகளை தேடுவது லாபகரமானதாக அமையும். இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். விஷயம் உங்களுக்கே புரிய வரும்.

நீங்கள் ஒரு நகைக்கடைக்கு சென்று ரூ.1 லட்ச ரூபாய் கொடுத்து நகை வாங்குகிறீர்கள். அதற்கு உண்மையாக உங்களுக்கு கிடைக்கும் மொத்த நகையின் மதிப்பு 88,000 ரூபாயாக மட்டுமே இருக்கும். மீதமுள்ள ரூ.12,000 செய்கூலி, சேதாரம், 3 சதவீத ஜிஎஸ்டி என பிற விஷயங்களுக்காக கடைக்காரர் பயன்படுத்திக் கொள்வார். இதனால் நீங்கள் நகை வாங்கிவிட்டு கடையிலிருந்து வெளியேறும் அடுத்த கணமே உங்களுக்கு 12,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் போட்ட ரூ.1 லட்சம் பணத்திற்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமானால் தங்கத்தின் மதிப்பு 13 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் தங்க நகை வாங்க பயன்படுத்திய ரூ.1 லட்சத்திற்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். அதுவரையில் நீங்கள் போட்ட பணம் நஷ்டத்தில் தான் இருக்கும்.
ஆனால் இந்திய குடும்பங்களில் சில பண்டிகைகளுக்கு தங்கம் வாங்குவது செல்வத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனாலும் மக்கள் தொடர்ந்து தங்கம் வாங்குகின்றனர். தங்கம் வாங்குவது சம்பிரதாயம்தான் வாங்கலாம். ஆனால் செய்கூலி கொடுத்து நகையாக வாங்கினால் அது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது.
எனவே பண்டிகை மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்காக நகை வாங்குபவர்கள் ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் தங்க காயின்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மேக்கிங் சார்ஜ் எதுவும் கிடையாது. மாறாக டையிங் சார்ஜ் மற்றும் பிற கட்டணங்களை செலுத்தினால் போதுமானது. ஆனால் முதலீட்டுக்காக தங்கம் வாங்கினால் கோல்ட் காயின்கள் அல்லது கோல்ட் ETF-களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இதற்கு செய்கூலி, சேதாரம், இப்படி எதுவுமே கிடையாது. தங்கத்தின் முழு மதிப்பும் உங்களை வந்தடையும்.
கோல்ட் ETF: தங்கத்தில் முதலீடு செய்வதை விட கோல்ட் ETF-களில் முதலீடு செய்வது உங்களுடைய பணத்தின் மதிப்பை அதிகரிக்கும். ஏனெனில் ETF-களை வாங்குவதற்கு ஜிஎஸ்டி மற்றும் மேக்கிங் சார்ஜ் கிடையாது. ஒரே ஒரு டீமேட் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது. ஆனால் நீங்கள் புரோக்கரேஜ் தளத்திற்கு வருடாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். இந்த செலவு ஆண்டுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவு தான். அப்படி பார்த்தாலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான கோல்டு ETF வாங்கினால் ஆண்டுக்கு 500 ரூபாய் தளத்திற்கு கட்டணம் செலுத்தினால் போதுமானது.
மேலும் தங்க நகைகளாக வாங்கிவிட்டு அதிலிருந்து சில ஆண்டுகள் கழித்து விற்பனை செய்தால் அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். உதாரணமாக 24 மாதங்கள் வரை தங்க நகைகளை வைத்திருந்து அதன் பிறகு விற்றால் 12.5% வரி செலுத்த வேண்டும். ஆனால் 24 மாதங்களுக்குள் விற்றால் உங்களுடைய ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படும்.
நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருக்கிறீர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் உங்கள் நகையின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நீங்கள் தங்கத்தை விற்பனை செய்யும் போது 10 சதவீத செய்கூலி மற்றும் 5 சதவீத ரீசெல் டிடக்ஷன் கழித்துக் கொள்வார்கள்.
அதாவது தங்கத்தை வாங்கும்போதே 10 சதவீத செய்கூலியும், 3 சதவீத ஜிஎஸ்டியும் கழித்துக் கொள்வார்கள். அப்படியானால் நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு ரூ.88,495 ஆக இருக்கும். 3 ஆண்டுகள் கழித்து விற்பனை செய்கிறீர்கள்.. இப்போது அதே தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்றால் அதே 88,495-இல் 5 சதவீத ரீசேல் டிடக்சன் பிடித்தம் செய்வார்கள். 4425 ரூபாய் வரும். இதனால் உங்கள் கைக்கு வரும் தொகை தோராயமாக 84,070 ரூபாய் இருக்கும், ஆனால் நீங்கள் போட்ட மொத்த பணம் ரூ.1 லட்சம். விற்பனைக்கு பிறகு கைக்கு வந்த பணம் ரூ.84,070. இதில் மொத்த நஷ்டம் ரூ.15,930. நஷ்ட சதவீதத்தை கணக்கிட்டால் 15.93 சதவீதம் வரும். தோராயமாக 16 சதவீதம் நஷ்டம் ஏற்படும்.
அதேபோல நீங்கள் வாங்கிய காயின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்றாலும் விற்பனை விலையில் வரியாக ரூ.3644 செலுத்த வேண்டி இருக்கும். இதனால் கைக்கு கிடைக்கும் தொகை ரூ.121,700 ரூபாயாக இருக்கும், நஷ்ட சதவீதத்தை கணக்கிட்டால் 4 சதவீதம் வரும். அதுவே கோல்ட் ETF-களாக இருந்தால் ரூ.3650 வரி செலுத்த வேண்டும். வரிக்குப் பின்னர் கைக்கு கிடைக்கும் வருமானம் ரூ.1,24,400 ஆக இருக்கும். இதற்கு 1.5 சதவீத நஷ்டம் ஏற்படும். இந்த மூன்றோடு ஒப்பிடுகையில் கோல்ட் ETF-ஆல் ஏற்படும் நஷ்டம் குறைவு.


Click it and Unblock the Notifications
