தீபாவளி 2026: ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்! வாடிக்கையாளர்களுக்கு செம ஆஃபர்!

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தந்தேராஸ் பண்டிகையுடன் தொடங்கும். இந்த ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் தங்கம், வெள்ளி, வீடு மற்றும் வாகனம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்.. கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சலுகைகளுடன் வீட்டு வாசலுக்கே டோர் டெலிவரி செய்து வருகிறது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் தங்கம் வாங்க விரும்புபவர்கள் கல்யாண் ஜுவல்லர்ஸ்-இன் 0.5 கிராம் முதல் 10 கிராம் வரையிலான கோல்ட் காயின்கள் மற்றும் 1 கிராம் முதல் 100 கிராம் வரையிலான சில்வர் காயின்களை வாங்கலாம்.

தீபாவளி 2026: ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம்! வாடிக்கையாளர்களுக்கு செம ஆஃபர்!

வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?: நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6-ஆம் தேதி வரையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தங்க நாணயங்களை வாங்கும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும்.

இதற்குக் கூடுதலாக தங்க நாணயம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 கிராம் மதிப்புள்ள வெள்ளி நாணயத்தின் டிஜிட்டல் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும். ஆனால் இது எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. சில நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்படும்.

இந்தக் கூப்பனைப் பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்தியா முழுவதிலும் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் நகை வாங்கும்போது சலுகைகளைப் பெறலாம். மளிகை பொருட்கள், ஆடைகள் போன்றவற்றுக்கு குவிக் காமர்ஸ் தளங்களை பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது தங்கம் வாங்கவும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 258 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வெள்ளி விற்பனையும் 185 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் ஆர்வம்: சமீப காலமாக ஆன்லைன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வாங்குவதில் இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெங்களூரு முதலிடம் பெற்றுள்ளது. அடுத்தபடியாக மும்பை, ஹைதராபாத், கோயம்புத்தூர், இந்தூர், புவனேஸ்வர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ரூ.2,52,459 மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை ஆர்டர் செய்துள்ளார். இதில் 50 கிராம் மதிப்புள்ள வெள்ளி பார் மற்றும் விநாயகர் உருவம் பொறித்த தங்க நாணயங்கள் அடங்கும்.

இந்த தீபாவளிக்கு ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம். குவிக் காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தி தங்கம் வாங்குவது நேரத்தை கண்டிப்பாக மிச்சப்படுத்தும். ஆனால் விலையை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். விளம்பரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் விலை குறைவாக தோன்றலாம். ஆனால் இறுதியாக நீங்கள் செலுத்தும் கட்டணம் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

அதேபோல நீங்கள் ஆர்டர் செய்யும் தளத்தில்.. வாங்கிய பொருட்களில் பிரச்சனை இருந்தால் மாற்ற முடியுமா? ரிட்டன் பாலிசி அல்லது ரீபிளேஸ்மென்ட் பாலிசி எப்படி இருக்கிறது என்பதை சரி பாருங்கள். எதில் தங்கம் வாங்கினாலும் சரி, வரி மற்றும் டெலிவரி கட்டணங்கள் எவ்வளவு என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆர்டர் செய்து முடித்தவுடன் அதற்கான இன்வாய்ஸ்-ஐ பாத்திரமாக வைத்திருங்கள்.பொருள் கைக்கு வந்த பிறகு பேக்கிங் எப்படி இருக்கிறது.. நீங்கள் ஆர்டர் செய்த பொருள்தான் உண்மையிலேயே வந்திருக்கிறதா? என்பதையும் சரிபாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+