திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?

சினிமா குடும்ப பின்னணியில் இருந்து திரையுலகில் கால் பதித்தாலும் சுய உழைப்பின் மூலம் தன்னை செதுக்கி கொண்டு பன்முகம் கொண்டவராக உயர்ந்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவர் நடிக்கும் படம் என்றாலே சிறந்த கதை இருக்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் வரை கொண்டு சேர்த்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது திறமையால் பல உயரங்களை எட்டி நாடே கவனிக்கும் நடிகராக உயர்ந்துள்ளார். 2002ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானார் தனுஷ். ஒல்லியான உடல்வாகு கொண்ட இந்த பையனா நடிகனா என பலரும் கேலி செய்த நிலையில் காதல் கொண்டேன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டணி அமைத்து நடித்த படங்கள் அனைத்துமே செம் ஹிட்.

திரைப்படங்களை விடுங்க.. தனுஷுக்கு இப்படி ஒரு பிஸ்னஸ் இருக்கு தெரியுமா?

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், பாடல் ஆசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்து அனைத்திலுமே வெற்றி பெற்றுள்ளார் தனுஷ். திரைத்துறை மற்றும் வணிக முதலீடுகள் மூலம் தனுஷ் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பு கொண்டவராக உருவெடுத்துள்ளார்.

தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க 20 முதல் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையின் மிக முக்கிய விஐபி பகுதியான போயஸ் கார்டனில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார். இங்கே தான் ரஜினிகாந்த், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் வீடு இருக்கிறது.

Also Read

போயஸ் கார்டன் மட்டுமின்றி, ஆழ்வார்பேட்டையிலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. மேலும், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களிலும் சொத்து முதலீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷிடம் Rolls-Royce Ghost கார் உள்ளது. இதன் விலை சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும். Jaguar XE, Mercedes-Benz S-Class, Range Rover Sport HSE, Ford Mustang ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார். தனுஷ் சொந்தமாக வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார். இதன் மூலமும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது.

Recommended For You

அதுமட்டுமில்லாமல் Dhanush Global Ventures Private Limited என்ற பெயரில் ஒரு முதலீட்டு நிறுவனமும் அவர் நடத்தி வருகிறார். Tracxn Network என்ற சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 'Dhanush Global Ventures' நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கார்ப்பரேட் தொடர்புகள், கூட்டு முதலீடுகளை மேற்கொள்கிறது. இதில் ரியல் எஸ்டேட் முக்கிய தொழிலாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பெருநகர மையங்களில் உள்ள உயர்தர குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தி பராமரிப்பது போன்ற செயல்களில் இந்நிறுவனம் முதலீடு செய்வதாக சொல்லப்படுகிறது.

தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் திரை உலகிலும் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் அவற்றை எல்லாம் சாமர்த்தியமாக கையாண்டு தன்னுடைய தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறி பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+