10வது கூட படிக்கல, ஆனா 15000 கோடி மசாலா நிறுவனத்திற்கு சொந்தக்காரர் - MDH Masala

அஸ்லி மசாலே சச் சச் எம்டிஹெச் எம்டிஹெச் என்ற முழக்கத்தை ஹிந்தி சேனல்களில் கேட்டிருப்பீர்கள். எம்டிஹெச் விளம்பரத்தில் மீசையை முறுக்கியபடி புன்னகைக்கும் ஸ்பைஸ் கிங் தர்மபால் குலாட்டியை யாராலும் மறக்கமுடியாது.

நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்து வந்தார் தர்மபால் குலாட்டி. ஸ்பைஸ் கிங் என பிரபலமான மஹாசாய் தர்மபால் குலாட்டியின் வாழ்க்கையில் பின்னடைவு, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்துள்ளன.

10வது கூட படிக்கல, ஆனா 15000 கோடி மசாலா நிறுவனத்திற்கு சொந்தக்காரர் - MDH Masala

பாகிஸ்தானில் உள்ள சியால்கட்டில் 1923ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தார் தர்மபால் குலாட்டி. அவரது குடும்பம் பாரம்பரியமாக மசாலா வியாபாரத்தை செய்து வந்தது. அவரது தந்தையின் மகாஷியான் டி ஹட்டி என்ற கடை மிகவும் பிரபலமானது.

10 வயது இருக்கும்போதே தனது படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்துக்கு உதவியாக இருந்தார் குலாட்டி. அரிசி வியாபாரம், தச்சு வேலை, ஹார்டுவேர் விற்பனை என பல்வேறு வேலைகளை குலாட்டி செய்து வந்தார். பின்னர் தனது தந்தையில் கடையில் சேர்ந்தார். அப்போது அவரது கடையில் தினசரி வியாபாரம் ரூ.500-800 என்ற அளவில்தான் இருந்தது.

தர்மபால் குலாட்டிக்கு 24 வயதிருக்கும் போது நாடு பிரிவினை வந்தது. மஹாஷியான் டி ஹட்டி என்ற அவரது கடைகள் கலவரத்தால் பாதிக்கப்பட்டது. அதற்கு நடுவில் வீடு, சொத்துக்களை விட்டுவிட்டு குலாட்டியின் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்தது.

டெல்லியில் அவரது குடும்பம் அகதிகளுக்கான பதிவை செய்துவிட்டு வீட்டுக்குத் தேவையான ரேஷன்களை வாங்கியது. கரும்பு விற்பனை, குதிரை லாயத்தில் வேலை என பல்வேறு முயற்சிகளில் குலாட்டி ஈடுபட்டார். கடைசியில் எம்டிஹெச் மசாலா பிராண்டை தொடங்கினார்.

1941 ஆம் ஆண்டு லீலாவதி என்ற பெண்ணை குலாட்டி திருமணம் செய்தார். பிரிவினை நேரத்தில் குலாட்டியிடம் வெறும் ரூ.1500 மட்டுமே இருந்தது. டோங்கா ஒன்றை வாடகைக்கு எடுத்து புதுடெல்லி ரயில்வே நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு குலாட்டி சவாரி சென்றார்.

இதன்மூலம் ரூ.650 வருமானம் வந்தது. பின்னர் டெல்லியின் கரோல்பாக் பகுதியில் 14க்கு 9 அடி பரப்பில் ஒரு சிறிய கடையை வைத்தார். அந்தக் கடையில் தான் அவரது மசாலா பொருட்கள் விற்பனை தொடங்கியது.
மகாஷியான் டி ஹட்டி இப்போது எம்டிஹெச் என்ற பிராண்டாகி தேக்கி மிர்ச் வாலா என்று பெயர்பெற்றது.

டெல்லிக்கு வந்த பின்னர் குலாட்டியின் குடும்பத்தில் நிம்மதி பிறந்தது. தொடக்கத்தில் மிகவும் சிரமத்துக்கு ஆளானது. ஒரு சிறிய வீட்டில் ஒண்டுக்குடித்தனத்தை நடத்தினார் குலாட்டி. ஆனாலும் மனம் தளராமல் இருந்தார் குலாட்டி.

இந்த நிலையில் அவரது எம்டிஹெச் பிராண்டு பிரமாண்ட வளர்ச்சியை அடைந்தது. அவரது தயாரிப்புகளின் தரம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் இரண்டாவது மசாலா பொருட்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளராக குலாட்டி உயர்ந்தார்.
எவரெஸ்ட் ஸ்பைசஸ் உரிமையாளர் எஸ்.நரேந்திரகுமார் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக மார்க்கெட்டில் 12 சதவீத பங்கை குலாட்டி நிறுவனம் கைப்பற்றியது.

60க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் எம்டிஹெச் தயாரிப்புகள் விற்பனை ஆனது. தேக்கி மிர்ச்சிலிருந்து சாட் மசாலா, சென்னா மசாலா என அவரது தயாரிப்புகள் இந்தியக் குடும்ப சமையலறையில் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

குலாட்டியின் தாக்கம் மசாலாக்களைத் தாண்டி இருந்தது. எம்டிஹெச் இண்டர்நேஷனல் ஸ்கூல், மஹாசாய் தர்மபால் வித்யா மந்திர் ஆகியவற்றை குலாட்டி நிறுவினார். அத்துடன் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, மொபைல் ஹெல்த் கேர் யூனிட் எனத் தொடங்கி குடிசை வாசிகள், ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை வசதியை அளித்தார்.

மஹாசாய் சுன்னிலால் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் அவரது நற்பணிகள் தொடர்ந்தன. கோவிட் 19 தொற்றுக் காலத்தினஅபோது அவர் முதல்வர் நிவாரண நிதிக்காக 7500 பிபிஇ கிட்களை வழங்கினார். டெல்லியில் கரோனா போராளிகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் குலாட்டி.

அவரது திறமையையும் சேவை குணத்தையும் பாராட்டி 2019 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருது வழஹ்கப்பட்டது. அவரது வாழ்க்கை பல வகையான நறுமணத்தை மட்டுமல்லாமல் சேவை நோக்கத்தையும் பரப்பியது.

94 வயதில் எம்டிஹெச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து அதிக ஊதியம் வாங்கும் நபராகத் திகழ்ந்தார். கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் ஆதி கோத்ரேஜ், விவேக் கம்பீர், ஹிந்துஸ்தான் யுனிலீவரின் சஞ்சீவ் மேத்தா, ஐடிசியின் தேவேஷ்வர் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளினார்.

1997ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி குலாட்டி காலமானார். ஆனால் அவரது சாதனை சாம்ராஜ்ஜியம் உலகில் இன்னும் வாசம் தருகிறது. துடிப்பான தொழில்முனைவோருக்கு அவரது வாழ்க்கை நல்ல பாலபாடமாக விளங்குகிறது.

ஸ்பைஸ் கிங்கின் சரித்திரம் சிரமங்களுக்கு இடையே போராடி வாய்ப்புகளை வெற்றியாக்கும் உத்வேகத்தைத் தருகிறது. அடுத்து வரும் எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு வழிகாட்டி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+