தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு முன்னெடுத்து வரும் முக்கிய திட்டங்களில் ஒன்றான சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி தாண்டி பெரிய உற்பத்தி தளமாக மாறியிருப்பது ஓசூர்.
ஆனால் ஓசூர் பெரும் உற்பத்தி நகரமாக மாறி வரும் வேளையில் அனைத்து நிறுவனங்களுக்கும் போதுமான, சரியான இடம் கிடைக்கப்பது இல்லை. இதனால் தமிழ்நாடு அரசு ஓசூர்-ஐ விரும்பி வரும் முதலீட்டாளர்களுக்கு மாற்று இடமாகவும், ஓசூர்-ல் கிடைக்கும் அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் கொண்ட தர்மபுரியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

தர்மபுரியில் சிப்காட் அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், தர்மபுரி சிப்காட் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் மூலம் ஏற்கனவே பெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தர்மபுரி சிப்காட் திட்டம் இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில், தர்மபுரி சிப்காட் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி சிப்காட் சுமார் 1733 ஏக்கர் பரப்பளவில் அமையும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 462 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும், இந்த தொழிற்பூங்காவில் சுமார் 20000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி சிப்காட் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சிவப்பு பிரிவில் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி சிப்காட் திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications