திருபாய் அம்பானி சந்தித்த பெரும் தோல்வி.. மறக்க முடியாத வரலாறு..!

இந்திய தொழிற்துறையில் பணம் உள்ளவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உடைத்து எளியவர்களும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை காட்டியவர் திருபாய் அம்பானி. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி பிறந்த தினம் இன்று, 1932 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார்.

திருபாய் அம்பானி தொட்டது எல்லாம் வெற்றி என்ற போக்கு நீண்ட காலமாக இருந்தது, ஆனால் அவர் சந்தித்த பெரும் தோல்வி, மாபெரும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்திருக்கும் எல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தது தான்.

திருபாய் அம்பானி சந்தித்த பெரும் தோல்வி.. மறக்க முடியாத வரலாறு..!

எல் அண்ட் டி எனப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம், இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல முக்கியக் கட்டுமான திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, இந்தியாவின் வளர்ச்சியில் சுமார் 80 வருடங்களுக்கு அதிகமாக முக்கிய பங்கு விகித்து வருகிறது.

இந்த மாபெரும் நிறுவனத்தைக் கைப்பற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் அப்போதையத் தலைவர் திருபாய் அம்பானி முயற்சி செய்து பெரும் தோல்வி அடைந்தார். இது திருபாய் அம்பானி தொழில் வாழ்க்கையில் பெரும் தோல்வியாக பார்க்கப்பட்டது.

1986-87 காலக்கட்டத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தின் அப்போதைய தலைவரான என்.எம்.தேசாய், திருபாய் அம்பானியிடம், எல் அண்ட் டி நிறுவனத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இதை தொடர்ந்து 1987 முதல் 1989க்குள் மொத்தம் 18.5 சதவீத பங்குகளை கைப்பற்றி எல் அண்ட் டி நிறுவனத்தின் நிர்வாக குழுவில் திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் நுழைந்தனர்.

திருபாய் அம்பானி சந்தித்த பெரும் தோல்வி.. மறக்க முடியாத வரலாறு..!

இதன் பின்பு 1989ல் விபி.சிங் தலைமையிலான ஆட்சி அமைந்த போது எல்ஐசி நிறுவனத்தை எல் அண்ட் டி நிறுவனத்தில் அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்ற அரசு உத்தரவிட்டது. இதனால் எல் அண்ட் டி உயர்மட்ட நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், சில காலம் மட்டும் தலைவராக இருந்த திருபாய் அம்பானி பதவிநிக்கம் செய்யப்பட்டு அப்போதைய எஸ்பிஐ வங்கியின் தலைவரான டிஎன் கோஷ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து பல ஆட்சிமாற்றங்கள் நடந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம், எல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்றும் வாய்ப்புகளை இழந்தது. இந்த நிலையில் நவம்பர் 2001ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கையில் இருந்த 10.05 சதவீத எல் அண்ட் டி பங்குகளை பிர்லா குழுமத்திற்கு விற்கப்பட்டது.

இதன் மூலம் எல் அண்ட் டி நிறுவனத்தை கைப்பற்றும் திருபாய் அம்பானியின் கனவு பெரும் தோல்வியில் முடித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+