வாழ்க்கை என்பது ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஒரு சாகஸப் பயணம். வெற்றி எனும் சிகரத்தைத் தொட்டு அங்கு இருகைகளையும் பரந்து விரித்து நிம்மதி எனும் சுவாஸக் காற்றை அனுபவிக்கும் அதே சுகம் போலவே தோல்வி எனும் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் நிலவும் இனம்புரியாத அமைதியில் இருக்கும் நிம்மதியையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தோல்விதான் நம் புத்தியை கூர்மையாக்குறது. விடாமுயற்சியை தோற்றுவிக்கிறது. இத்தகைய முதிர்ச்சியை இந்த வாழ்க்கைப் பயணம்தான் ஒருவருக்கு அளிக்கிறது. இப்படி தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் உழைத்து வெற்றி பெற்ற ஒரு மனிதரைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

அவர் பரிமல் நத்வானி ஆந்திர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக உள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் படித்தார் பரிமல் நத்வானி. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் முடித்துள்ளார்.
நியூ இரா மில்லில் பிளீச்சிங் துறையில் அவரது முதல் வேலை அமைந்தது. தொழிலின் நுணுக்கத்தைக் கற்றுத் தேர்ந்த பிறகு நத்வானி ஒரு சோப் ஏஜென்ஸியை மும்பையில் தொடங்கினார். இந்தத் தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பங்குச் சந்தை பக்கம் திரும்பிய நத்வானி அங்கு முதலீடு செய்தார்.
ஆனால் அப்போது ஹர்ஷத் மேத்தா மோசடியால் பங்கு சந்தையில் விலை மிகவும் எகிறியதால் நத்வானியின் நம்பிக்கை வீணானது. பின்னடைவு ஏற்பட்டாலும் சிரமங்களை சந்திக்க அவர் தயாரானார். 1995 ஆம் ஆண்டு நத்வானியின் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது. தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி என்ற திருபாய் அம்பானியை அவர் சந்திக்க நேர்ந்தது.
இந்த குறிப்பிட்ட ஆண்டில் அம்பானி குடும்பம் பெரியதொரு வாய்ப்பைப் பெற்றது. ஜாம்நகரின் மோடி காவ்டியில் உள்ள கிரீன்பீல்டு ரிபைனரில் பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதற்காக நிலம் தேவைப்பட்டது. இது பெரிய சவாலாக அம்பானி குடும்பத்துக்கு விளங்கியது.
10000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளின் சம்மதத்துடன் வாங்கித் தரவேண்டிய பொறுப்பை நத்வானிக்கு திருபாய் கொடுத்தார். ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது என்று தெரிந்தால் நில விலை அதிகரித்துவிடும் என்ற சூழ்நிலையில் கமுக்கமாக நிலத்தை வாங்கும் வேலை ரொம்பவே சிரமாக இருந்தது நத்வானிக்கு.
இந்நிலையில் நத்வானியும் ரிலையன்ஸ் டீமும் சேர்ந்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கியது. அத்துடன் 400 சொத்துகள் கிரைய வகையிலும் 1200 சொத்துகள் குத்தகை முறையிலும வாங்கப்பட்டதால் ஜாம்நகரில் பிளான்டை அமைக்க ஏதுவானது.
1999 ஜூலை 14 ஆம் தேதியன்று ஜாம்நகர் ரிபைனரி உற்பத்தியை தொடங்கியது. 1997இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சி அடைந்தபோதது நத்வானிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்து. குஜராத்தில் ரிலையன்ஸின் முகமாக நத்வானி பார்க்கப்பட்டார்.
இந்நிலையில் ராஜ்ய சபைக்கு உறுப்பினராக நத்வானி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.396 கோடியாகும். இப்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் கார்ப்பரேட் அபார்ஸ் இயக்குநராக உள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications