மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்திருக்கிறது திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல். தொழிலதிபர்களின் குழந்தைகள், திரைப்பட நடிகர் நடிகைகளின் குழந்தைகள் என பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளி, இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டஸ்ட்ரீஸால் நிறுவப்பட்டது. முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோரின் தந்தையான மறைந்த திருபாய் அம்பானியின் நினைவாகத்தான் இப்பள்ளிக்கு "திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல்" எனப் பெயரிடப்பட்டது.
தற்போது திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலை அம்பானி குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். கவுன்சில் பார் தி இந்தியன் ஸ்கூல் செர்டிபிகேட் எக்ஸாமினேஷன் மற்றும் கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் இன்டர்நேஷனல் எஜுகேஷன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களை இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் மற்றும் சர்வதேச பொதுக் கல்வி சான்றிதழ் தேர்வுகளுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை IB டிப்ளமோ படிப்புகளுக்கும் தயார் செய்கின்றனர். முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் பள்ளி என்பதால் அவ்வப்போது இந்த பள்ளியைப் பற்றியச் செய்திகள் வெளியாகும். அப்படி வெளியான சில ஊடக அறிக்கைகளின் படி திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் கல்வி கட்டணம் குறித்து பார்ப்போம்.
கல்வி கட்டணம்: கிண்டர்கார்டன் முதல் 7-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1.70 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணமாக 14,000 ரூபாய் செலுத்த வேண்டும். 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடாந்திர கட்டணம் ரூ. 5.9 லட்சம். அதுவே 11-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடாந்திர கட்டணம் ரூ. 9. 65 லட்சம்.
இந்த வருடந்திர கட்டணத்துடன் புத்தகங்கள், ஸ்டேஷனரி ஐட்டங்கள், சீருடைகள், போக்குவரத்து செலவுகள் அனைத்தும் வந்துவிடும். தகுதியான மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக திருபாய் அம்பானி ஸ்கூலில் அவ்வப்போது உதவி தொகைகள் மற்றும் நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களின் சம்பளம்: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் பள்ளி என்பதால் இந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆசிரியரின் சம்பளம் அவர்களுடைய அனுபவம் மற்றும் பதவியை பொறுத்து மாறுபடுகிறது.
இங்கு ஒரு ஆசிரியருக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ. 15,000 முதல் ரூ. 50,000 வரை இருக்கும். இதில் அடிப்படை சம்பளம் மற்றும் கூடுதல் சம்பளமும் அடங்கும். இந்தப் பள்ளியில் சராசரியாக மாதத்திற்கு 42,000 வரையில் சம்பளம் பெறுபவர்கள் உள்ளனர். மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 6 லட்சம் வரை வழங்கப்படுகிறது
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications