இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தனது தந்தை சிறுவயது முதல் இளமை காலத்தில் பெரும் பகுதியை செலவிட்ட வீட்டை மறுசீரமைப்பு செய்து நினைவிடமாக மாற்றியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் ஆடம்பர வாழ்க்கையில் தந்தைக்கு நினைவிடம் அமைப்பது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தந்தை வாழ்ந்த வீட்டை நேரம் எடுத்து நினைவிடமாக மாறியுள்ளது மிகவும் முக்கியமான விஷயம். இந்த நினைவிடத்தை சாமானிய மக்களும் நேரில் சென்று பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.

குஜராத்தில் உள்ள திருபாய் நினைவு இல்லம் முகேஷ் அம்பானியின் மூதாதையர் இல்லமாகும். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாளிகை குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள சோர்வாட் என்ற கடற்கரை கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் இந்த வீட்டுக்கு 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக அம்பானி பாரம்பரியத்துடன் தொடர்பு உள்ளது.
முகேஷ் அம்பானி 2 அடுக்கு கொண்ட வீட்டை நினைவகமாக 2011ல் மாற்றினார், இந்த வீட்டில் இருந்து பழைய மர சாமான்கள், பித்தளை பாத்திரங்கள், குடும்ப போட்டோ, பொருட்கள் இன்றும் அடையாளமாக வைக்கப்பட்டு உள்ளது.
திருபாய் அம்பானி மெமோரியல் ஹவுஸ் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி குடும்பத்திற்காக ஒரு பகுதியும், மற்றொன்று பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ஒரு பகுதியும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தென்னை தோப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய வர்த்தக பாதையில் பழம்பெரும் தொழிலதிபரான திருபாய் அம்பானி இந்த வீட்டில் வளர்ந்தார், அவர் வணிகத்தில் சிறந்து விளங்கி மும்பைக்கு குடிபெயர்ந்தாலும், திருபாய் ஓய்வுக்காவும், பழைய நினைவுகளை அசைப்போட இந்த வீட்டுக்கு தான் வருவாராம். முகேஷ் அம்பானியும் சிறுவயதில் இந்த வீட்டில் பல காலம் வாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் இருக்கும் இந்த நினைவிடத்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் சென்று பார்வையிட முடியும். சமீபத்தில் இந்த நினைவிடத்தில் Dhirubhai Ambani Foundation சில முக்கிய மேம்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications