தந்தை போலவே மகனும்.. திருபாய் அம்பானி-யின் 1977 சம்பவம்.. முகேஷ் அம்பானி-யின் 'பீக் சம்பவம் லோடிங்'..!!

இந்திய முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்க்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ நாளை ஆங்கர் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்படுகிறது.

சுமார் 20 வருடங்களுக்குப் பின்பு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ஐபிஓ என்பதைத் தாண்டி திருபாய் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 40-45 வருடத்தில் பங்குச்சந்தையில் செய்த மேஜிக்-ஐ மீண்டும் முகேஷ் அம்பானி உருவாக்கப்போகிறார் என அதிகம் பேசப்பட்டு வருகிறது. 1977 ஐபிஓ மூலம் என்ன மேஜிக் நடந்தது..?

1977ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் ஒரு முதலீட்டாளர் 1000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு என்னவாக இருக்கும்..?

தந்தை போலவே மகனும்.. திருபாய் அம்பானி-யின் 1977 சம்பவம்.. முகேஷ் அம்பானி-யின் 'பீக் சம்பவம் லோடிங்'..!!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஐபிஓ

1977ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஐபிஓ வெளியிடும் போது ஒருவர் ரூ.1000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு ரிலையன்ஸ் பங்கின் விலை 10 ரூபாய் மற்றும் அதன் முகமதிப்பும் 10 ரூபாய். இதன் மூலம் அந்த முதலீட்டாளருக்கு 100 ரிலையன்ஸ் பங்குகள் கிடைத்திருக்கும்.

இந்த ஐபிஓ முதலீட்டைத் தாண்டி ஒரு பங்கைக்கூடப் புதிதாக வாங்காமல் இருந்திருந்தாலும், இந்நிறுவனத்தின் போனஸ் பங்குகள் வாயிலாக, 100 பங்குகள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டுக்குப் பின்பு சுமார் 6 முறை போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. 1980, 1983, 1997, 2009, 2017 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ரிலையன்ஸ் போனஸ் பங்குகளை அறிவித்தது.

இந்த போனஸ் பங்கு அறிவிப்புகளின் மூலம் ஐபிஓ-வில் வாங்கப்பட்ட 100 பங்குகள், படிப்படியாக உயர்ந்து இன்று 4,096 பங்குகளாக அதிகரித்திருக்கும். இதன் மூலம் ரிலையன்ஸ் பங்குகளின் தற்போதைய மதிப்பு கணக்கிட்டால், அதாவது 4,096 பங்குகளின் இன்றைய சந்தை மதிப்புக்கு இணையாகக் கணக்கிடும் போது 49.7 லட்சம் ரூபாயாகும்.

இதோடு நிற்கவில்லை, 2023ல் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளும் அந்த முதலீட்டாளருக்குக் கிடைத்திருக்கும். அதாவது 1977 ஆம் ஆண்டு ஐபிஓ முதலீடு வாயிலாக 2048 ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகளும் கிடைத்திருக்கும், இதன் மதிப்பு தனியாக ரூ.4.5 லட்சம்.

Also Read

இதன் மூலம் 1977 ஆம் ஆண்டு ஐபிஓ-வின் மொத்த முதலீட்டு மதிப்பு, ரிலையன்ஸ் + ஜியோ ஃபைனான்சியல் பங்குகள் மூலம் சுமார் 54.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பங்குகள் தற்போது அந்த முதலீட்டாளர் கையில் இருந்திருக்கும்.

இதைத் தாண்டி ரிலையன்ஸ் நிர்வாகம் அதன் முதலீட்டாளர்களைத் தக்க வைக்கவும், தொடர்ந்து நிறுவனத்துடன் வளரவும் பல ஆண்டுகளாகக் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்த தொகையையும் கணக்கில் சேர்த்தால், மொத்த மதிப்பு 55 லட்சத்தை தாண்டும்.

தந்தை போலவே மகனும்.. திருபாய் அம்பானி-யின் 1977 சம்பவம்.. முகேஷ் அம்பானி-யின் 'பீக் சம்பவம் லோடிங்'..!!

திருபாய் அம்பானியின் மேஜிக்

ஆனால், இந்த டிவிடென்ட் தொகையை ஒரு ஸ்மார்ட் முதலீட்டாளராக மீண்டும் ரிலையன்ஸ் பங்குகளை வாங்குவதில் முதலீடு செய்திருந்தால் தற்போதைய மதிப்பு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் உயர்ந்திருக்கும் என்பது ரிலையன்ஸ் 1977 ஐபிஓவில் இருக்கும் சர்ப்ரைஸ்.

நீண்ட முதலீட்டின் மேஜிக்

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை (தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்) வைத்து நீண்ட காலம் முதலீட்டைத் தொடர்வது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ரிலையன்ஸ் காட்டியுள்ளது.

மேலும் இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சி என்பது இண்டர்நெட், டேட்டா அடிப்படையில் இருக்கும் வேளையில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் 60 சதவீத டேட்டா பயன்பாட்டைக் கையாளுகிறது.

Recommended For You

இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 1977 ஐபிஓ போலவே அடுத்த 20- 30 வருடத்தில் ஜியோ-வும் இதேபோன்ற மேஜிக்-கை முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தான் ஜியோ ஐபிஓ மீது மக்களின் எதிர்பார்ப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

பங்குச் சந்தையில் பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பதைவிட, நல்ல நிறுவனங்களில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து பொறுமையாகக் காத்திருப்பது பெரும் செல்வத்தை உருவாக்க உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+