இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றால் நம் நினைவுக்கு வருவது அம்பானியின் குடும்பம் தான். கௌதம் அதானி தனது நிறுவனத்திற்கு அதானி என பெயர் வைத்த நிலையில் திருபாய் அம்பானி மட்டும் ஏன் அம்பானி என பெயர் வைக்காமல் ரிலையன்ஸ் என பெயர் வைத்தார்..? அதுவும் ஆங்கில சொல்லான ரிலையன்ஸ் என்பதை தேர்வு செய்ய என்ன காரணம்..?
1958ஆம் ஆண்டு திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனம் இன்று இரண்டு தனிப்பிரிவுகளாக அவர்களது வாரிசு அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி தலைமையில் மாஸ் காட்டி வருகிறது.

இதில் ₹97,0678 கோடி என்ற மிகப்பெரிய சொத்து மதிப்புடன் நாட்டின் பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கும் நிலையில், பல வங்கிகளின் கடன்களைத் தீர்த்து பிரச்சனையில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார் அனில் அம்பானி.
இருவரும் தனித்தனியாக வர்த்தகம் செய்து வந்தாலும் 'ரிலையன்ஸ்' என்னும் பெயரை ஒவ்வொரு வர்த்தகத்திலும் புகுத்தி தனது தந்தைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். 1958 ஆம் ஆண்டு இந்த தொழில் குழுமம் நிறுவப்பட்டபோது அவர்களது தந்தையான திருபாய் அம்பானி அந்த பெயரை தேர்வு செய்தார். ரிலையன்ஸ் நாட்டின் மிகவும் பிரபலமான பிராண்ட் பெயர்களில் ஒன்றாக இருந்தாலும், இந்த பெயரின் பின்னணிக் கதை பலருக்குத் தெரியாது.
சுயசார்பு மற்றும் சுதந்திரம் மீதான தனது அதீத நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தனது நிறுவனத்திற்கு 'ரிலையன்ஸ்' என்று பெயரிட்டார் திருபாய் அம்பானி. மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனிநபராக ஒருவரின் இலக்குகளை அடைய ரிலையன்ஸ் நிறுவனம் வழிவகுக்கும் என்ற நோக்கில் அவர் இப்பெயரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் பெரு நிறுவனங்கள் மட்டுமே தொழில்துறையில் வெற்றி அடைய முடியும் சூழ்நிலை நிலவியது. சாமானிய மக்களுக்கு தொழில்துறையில் பெரிய வெற்றி அடைவது அவ்வளவு எளிதான காரியமாக இருந்தது இல்லை. இதை உடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர் தான் திருபாய் அம்பானி. தன்னுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதிமாக இருக்கும் காரணத்தாலேயே ஆங்கில பெயராக இருந்தாலும் விரும்பி தேர்வு செய்தார்.
முதலில் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி, பின்னர் பல்வேறு துறைகளில் நுழைந்த பிறகு அதன் பெயரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என மாற்றினார். தனது பெயரின் அர்த்தத்தை நிரூபிக்கும் வகையில், ரிலையன்ஸ் நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.
1977 ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸின் பங்கு வெளியீடு (IPO) இந்தியாவில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலான ஆர்வத்தைப் பெருமளவு தூண்டியது வரலாற்று நிகழ்வு. இந்த ஐபிஓ வெளியீடு ஏழு மடங்கு அதிகமாக முதலீட்டாளர் விருப்பத்தைப் பெற்றது.இது ரிலையன்ஸின் வளர்ச்சி திட்டங்களை வலுப்படுத்தியது.
திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி-க்கு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன்றும் இந்தியாவின் மிக பெரிய மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
இதன் சந்தை மதிப்பு ₹20,00,000 கோடி ஆகும். முகேஷ் அம்பானியின் தலைமையில், எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், இயற்கை எரிவாயு, சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு, தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் துணி தொழில் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications