ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தான் துரந்தர். பாக்ஸ் ஆபிஸில் பல வாரங்களுக்கு ஆதிக்கம் செலுத்தியது இந்த படம். இந்தி என மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இந்த படம் வசூலை குவித்தது.
ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான இந்த ஸ்பை திரில்லிர் படம் ஓடிடியிலும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படமாக இருந்தது. இந்த நிலையில் தான் துரந்தர் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. அந்த வகையில் துரந்தர் ரிவெஞ்ச் என்ற பெயரில் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. நாளை மறுதினம் அதாவது மார்ச் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்தி ,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் துரந்தர் -2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் அனைத்து மொழி சார்ந்த சினிமா ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்பை வைத்திருக்கக் கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கிறது. இந்த டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைத்து மொழிகளில் யூடியூப்பில் டிரெண்டிங்கானது. அந்த வகையில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இதுவரை இல்லாத முயற்சியாக இந்த திரைப்படம் 3 மணி நேரம் 55 நிமிடங்கள் காட்சி நேரம் கொண்டதாக திரைக்கு வருகிறது. அதாவது 4 மணி நேரம் காட்சி நேரம் கொண்டுள்ளது. கிட்டதட்ட 2 படங்கள் பார்ப்பதற்கு சமம். இதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல கோடிகளை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

வரும் வியாழக்கிழமை அன்று உலகம் முழுதும் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இந்த திரைப்படம் பல கோடிகளை குவித்து விட்டது. கிட்டத்தட்ட 130 கோடி ரூபாய் அளவிற்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத நிகழ்வாக ரன்வீர் சிங்கின் இந்த படத்திற்கு மும்பை, தானே உள்ளிட்ட வடமாநில நகரங்களில் அதிகாலை 2 மணியிலிருந்தே காட்சிகள் திரையிடப்படுவதாக தியேட்டர்கள் அறிவித்திருக்கின்றன.
24 மணி நேரமும் படம் திரையிடப்படும் என மும்பை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். மும்பையில் வழக்கமாக காலை 11 மணிக்கு தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே திரைப்படத்தை ஒளிபரப்பக்கூடிய மராத்தா மந்திர் திரையரங்கம் அந்த நேரத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. துரந்தர் படத்தை வெளியிடுவதற்காக முதல்முறையாக இந்த காட்சி நேரத்தை மாற்றியுள்ளது.
இதற்கிடையே துரந்தர் 2 படத்திற்கு paid preview காட்சிகள் நாளை திரையிடப்பட உள்ளன. இதற்கு மட்டும் சுமார் 40.5 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையாகி இருக்கிறதாம். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை இந்த திரைப்படத்திற்கு 70 கோடி ரூபாய்க்கு 12 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் ப்ரீ சேல்ஸ், பிளாக் புக்கிங் முறையில் விற்பனையாகி இருக்கின்றன. வெளிநாடுகளில் 60 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. வட அமெரிக்கா, பிரிட்டன் , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த கணக்கை கொண்டு பார்க்கும் போது துரந்தர் 2 படம் வெளியாவதற்கு முன்பே 123 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்து விட்டது. இது டிக்கெட் ப்ரீ சேல்ஸில் கிடைத்த விற்பனை ஆகும். அதே போல இந்த படத்தின் ஓடிடி உரிமம் 150 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் தான் இந்த படத்தை வாங்கியுள்ளது. அதே போல படத்தின் இசை உரிமம் சுமார் 60 கோடி ரூபாய்க்கு டீ சீரிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக படம் வெளியாவதற்கு முன்பே 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications