ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் துரந்தர் -2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் துரந்தர் படம் வெளியானது. ரன்வீர்சிங்,. சாரா அர்ஜூன், மாதவன் நடிப்பில் வெளியான இந்த படம் நாடு முழுவதும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது.
இந்த படம் அனைத்து மொழிகளிலும் பெரிய ஹிட் ஆனது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் 2ஆம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற பெயரில் நாளைய தினம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மொழி சார்ந்த சினிமா ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் டிக்கெட் வசூலை குவித்து இருக்கிறது.

அட்வான்ஸ் டிக்கெட் சேல்ஸ் தரவுகளின் படி துரந்தர் தி ரிவெஞ்ச் படம் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய படம் என்ற பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு விஜயின் லியோ, ஆர்ஆர்ஆர், பாகுபலி இரண்டாம் பாகம், புஷ்பா 2 ஆகிய படங்கள் தான் வெளியாவதற்கு முன்னரே அட்வான்ஸ் புக்கிங்கில் 200 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்து இருந்தன. அந்த வகையில் 200 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டிய முதல் நேரடி பாலிவுட் படம் என்ற பெருமையும் துரந்தர் 2 படத்திற்கு கிடைத்திருக்கிறது.
படம் வெளியாகக் கூடிய முதல் நாளில் முதல் நாளுக்காக மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருக்கிறதாம். இதுவரை இந்த திரைப்படம் டிக்கெட் விற்பனையில் மட்டும் 200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது, இதில் 125 கோடி இந்தியாவில் மட்டும் விற்பனையாகி இருக்கிறது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.
வடமாநிலங்கள் எங்கும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் கொண்ட படமாக இருக்கிறது. படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தான் துரந்தர் திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யா தர், ரசிகர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கையை வைத்திருக்கிறார்.

2025 டிசம்பர் 5ஆம் தேதி துரந்தர் படம் ரிலீஸ் ஆனது, அப்போது முதல் இந்த படத்தை நீங்கள் அனைவரும் உங்களுடைய படமாக ஏற்றுக் கொண்டு கொண்டாடினீர்கள், எங்களுடைய படம் உங்களுடைய படமாக மாறியது என கூறியிருக்கிறார். நாங்கள் துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் போது மக்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஏற்படுத்த வேண்டும் என்பதையும் சிறந்த திரை அனுபவத்தை தர வேண்டும் என்பதையும் முடிவு செய்தோம். அப்படிதான் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் வடிவமைத்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.
இந்த படத்தை காண வரும் ரசிகர்கள் தயவுசெய்து உங்களுடைய போனில் வீடியோக்களாக எடுத்து காட்சிகளை பகிர வேண்டாம் என கூறியிருக்கிறார் . அதாவது என்னுடைய அன்பான வேண்டுகோள் தயவுசெய்து ஸ்பாயிலர்களை தவிருங்கள் என கூறியிருக்கிறார். ஒவ்வொரு ரசிகரும் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு வரவேண்டும் இந்த திரை அனுபவத்தை பெற்று வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என கேட்டுக் கொண்டிருக்ககிறார். மேலும் படம் முடிந்து கலைஞர்கள் பெயர் திரையில் வந்து முடியும் அந்த கடைசி நொடி வரை இருக்கைகளை விட்டு எழுந்திருக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications