இந்திய திரையரங்கு துறை பல ஆண்டுகளாக கடும் போராட்டத்தை சந்தித்து வருகிறது, குறிப்பாக கோவிட் தொற்றுக்கு பின்பு, ஓடிடி பயன்பாடு அதிகரித்த பின்பு திரையரங்கிற்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்களை சார்ந்திருக்கும் திரையங்களுகள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது
ஆனால் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இத்துறைக்கு புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்த படம் உலகளாவில் கடந்த 15 நாட்களில் ரூ.700 கோடி வசூல் செய்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்திற்குள் ரூ.1,000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனமான PVR இனாக்ஸ் பங்குகளுக்கும், பங்குதாரர்களுக்கும் புதிய நம்பிக்கையை தந்துள்ளது. துரந்தர் திரைப்படத்தின் வெற்றி PVR இனாக்ஸ் பங்குகளை கடந்த ஒரு வாரத்தில் 1 சதவீதம் உயர்ந்ததுள்ளது.
துரந்தர் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், திரையரங்கு நிறுவனங்களுக்கு டிக்கெட் விற்பனை மற்றும் உணவு விற்பனை மூலம் வருவாய் உயர்த்துகிறது. பிரபுதாஸ் லில்லாதர் கேப்பிடல் போன்ற ஆய்வு நிறுவனங்கள் 2026ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் திரையரங்குகளின் பாக்ஸ்ஆபீஸ் ரூ.3,000 கோடி வரையிலான வசூல் வரலாம் என்று கணிக்கின்றன. கோவிட் பிறகு நான்காவது முறையாக 3000 கோடி ரூபாய் அளவீட்டை எட்டுவதாக தெரிகிறது.
PVR இனாக்ஸ் இந்திய திரையரங்கு சந்தையில் 30 சதவீத சந்தை பங்கு வைத்திருக்கும் காரணத்தால் இந்த 3000 கோடியில் ரூ.900 கோடி வசூல் PVR இனாக்ஸ்-க்கு கிடைக்கும். இந்நிறுவனத்திர்கு மொத்த வருவாயில் பாதி டிக்கெட் வசூலில் இருந்தும், மீதமுள்ள 50 சதவீதம் உணவு விற்பனையின் மூலம் வருவதால் இக்காலாண்டில் ரூ.1,800 கோடி வருவாய் எதிர்பார்க்கலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.
PVR இனாக்ஸ் பங்கு இந்த ஆண்டு 25 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த இரு மூன்று ஆண்டுகளில் 42 சதவீதம் இழப்பு ஏற்பட்டது. ஆனால் துரந்தர் போன்ற படங்கள் இதை மாற்ற உதவுகின்றன. இதை தொடர்ந்து இந்த வாரம் வெளியான அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் போன்ற பெரிய படங்களும் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
சிறு நகரங்களில் திரையரங்குக்கு செல்வது பெரிய கொண்டாட்டம். நல்ல படம் வந்தால் குடும்பத்துடன் செல்வது அதிகரிக்கும். துரந்தர் போன்ற படங்கள் திரையரங்குக்கு மக்களை இழுக்கின்றன. தென்னிந்தியாவில் அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாகும் காரணத்தால் மார்ச் காலாண்டிலும் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications