நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' ஸ்பை த்ரில்லர் திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.600 கோடி வசூல் மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரைப்படங்களான ரஜினி நடித்த ஜெய்லர், விஜய் நடித்த லியோ படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
அதித்யா தார் இயக்கிய துரந்தர் திரைப்படத்தில் அக்ஷய் கன்னாவின் ரெஹ்மான் டகைட் கேரக்டர் என்ட்ரி சீனுக்கு பயன்படுத்தப்பட்ட FA9LA பாடல் இணையத்தில் பெரிய வைரலாக மாறியுள்ளது. இந்த பாடல் பஹ்ரைன் ராப்பர் Flipperachi-யால் பாடப்பட்டது. டிஜே அவுட்லா இசையமைத்துள்ளார். இந்த பாடல் துரந்தர் படத்தில் அக்ஷய் கன்னாவின் கேரக்டர் ஆயுத ஒப்பந்தத்துக்கு பாலோசிஸ்தான் கிளர்ச்சியாளர்களை சந்திக்கும் சீனில் ஒலிக்கிறது. அக்ஷய் கன்னாவின் கருப்பு உடை, சிரிப்பு, சிறிய அளவிலான நடனம் இந்த பாடலுடன் சேர்ந்து சிறப்பாக அமைந்துள்ளது. FA9LA என்றால் பஹ்ரைன் அரபு டயலக்ட்டில் "மகிழ்ச்சி நேரம்" அல்லது "பார்ட்டி" என்று பொருள்.

உலகளாவிய வசூல் சாதனை
துரந்தர் படம் வெளியான 12 நாட்களில், இத்திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.634 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம், பத்மாவத் (ரூ.585 கோடி), லியோ (ரூ.605 கோடி), ஜெயிலர் (ரூ.607 கோடி) மற்றும் சுல்தான் (ரூ.622 கோடி) போன்ற படங்களின் வாழ்நாள் உலகளாவிய வசூலை முறியடித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த வசூல் வேகம் தொடர்வதால், உலக அளவில் ரூ.700 கோடி வசூல் என்ற மாபெரும் அளவை விரைவில் இத்திரைப்படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பாக்ஸ் ஆபிஸில், துரந்தர் ஏற்கனவே ரூ.400 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு வசூல் நிலவரம்
உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில், துரந்தர் திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.207.25 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தில், வெள்ளிக்கிழமை ரூ.32.5 கோடி, சனிக்கிழமை ரூ.53 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.58 கோடி, திங்கட்கிழமை ரூ.30.5 கோடி மற்றும் செவ்வாய்க்கிழமை ரூ.30.5 கோடி என வசூலித்து, மொத்தமாக ரூ.411.75 கோடியை ஈட்டியுள்ளது என பிஸ்னஸ் டூடே தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடி வசூல் என்ற முக்கியமான மைல்கல்லை நோக்கி 'துரந்தர்' வேகமாகச் செல்கிறது. இரண்டாவது புதன்கிழமைக்கான முதல் காட்சிகள் ஆரம்பிக்கும் முன்பே, முன்பதிவுகள் மூலம் மொத்தம் 3.34 லட்சம் டிக்கெட்டுகள் ரூ.8.67 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துரந்தர் திரைப்படத்திற்கு இதுவரையில் மொத்தமாக 3.34 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளது. இதில் பிவிஆர் ஐநாக்ஸ் மற்றும் சினிபோலிஸ் திரையரங்குகள் இணைந்து 1.64 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளன. இதில் பிவிஆர் சுமார் 82,000 டிக்கெட்டுகளையும், ஐநாக்ஸ் 54,000 டிக்கெட்டுகளையும், சினிபோலிஸ் 28,000 டிக்கெட்டுகளையும் விற்று முக்கியப் பங்காற்றியுள்ளன எனவும் பிஸ்னஸ் டூடே தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications