இந்தியா முழுவதும் 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்-ஐ கொண்டாடி தீர்த்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2025-ஆம் ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த அணியின் மிகப்பெரிய நட்சத்திரமான விராட் கோலி, உலகளவில் விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய சோஷியல் ஸ்டார் ஆக உள்ளார். RCB அணியின் வெற்றியை கொண்டாடிய மக்களில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு RCB அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டயாஜியோ நிர்வாகம் இது குறித்து ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டயாஜியோ நிர்வாகம், தனது இந்தியப் பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) மூலம் ஆர்சிபியை நிர்வாகம் செய்து வருகிறது.
RCB மதிப்பு எவ்வளவு தெரியுமா?: டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
டயாஜியோவின் செய்திதொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பிரதிநிதியும் எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை. டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியில் முதல் வெற்றியை பணமாக்க முடிவு செய்துள்ளது, 18 வருடத்திற்கு பின்பு வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி மீண்டும் வெற்றி பெருமா என்பது பெரும் கேள்வி தான். இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் உரிமையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்க முடிவு செய்துள்ளது டயாஜியோ. வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுக்க மற்றொகு முக்கியமான காரணமும் உள்ளது.
மதுபான விளம்பரங்கள் தடை: இந்தியாவில் மது மற்றும் புகையிலை பொருட்களின் நேரடி விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டயாஜியோ போன்ற நிறுவனங்கள், சோடா போன்ற பிற பொருட்களை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றன.
இதேவேளையில் இந்திய சுகாதார அமைச்சகம் ஐபிஎல்-இல் மது மற்றும் புகையிலை பிராண்டுகளின் விளம்பரங்களை, மறைமுக விளம்பரங்கள் உட்பட, தடை செய்ய வலியுறுத்தி வருகிறது. இந்த ஒழுங்குமுறை அழுத்தங்கள் தான், டயாஜியோவின் ஆர்சிபி பங்கு விற்பனை முடிவுக்கு முக்கியமான காரணமாக இருக்ககூடும்.
ஐபிஎல் மதிப்பு மற்றும் வர்த்தகம்: ஐபிஎல் அணிகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால், ஐபிஎல் அணி உரிமைகள் விளையாட்டுத் துறையில் மிகவும் விருப்பப்படும் சொத்துகளாக மாறியுள்ளன. ஆர்சிபி விற்பனை நடந்தால், இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்ஸ் லீக் போட்டியில் ஒன்றான ஐபிஎல்-இல் எதிர்கால ஒப்பந்தங்களுக்கு ஒரு அளவுகோலாக அமையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications