இந்தியாவில் மதுபான விற்பனையை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு வரவும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக உற்பத்தி நிறுவனமே விற்பனை செய்யும் மிக முக்கியமான திட்டத்தில் பிரிட்டன் மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ இறங்கியது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிப்பார் (HipBar) என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
ஆனால் இந்தியாவில் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் வாய்ப்பு அளிக்காத நிலையில், இத்திட்டத்தில் இருந்தும், ஹிப்பார் உடனான ஒப்பந்தத்தில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளது டியாஜியோ.
ஆன்லைன் மதுபான விற்பனை
இந்தியாவில் ஆன்லைன் மதுபான விற்பனை திட்டத்தைச் செயல்படுத்தப் பிரிட்டன் டியாஜியோ நிறுவனம் தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக ஹிப்பார் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 27 கோடி ரூபாய்க்கு 2018ல் கைப்பற்றியது.
அரசு அனுமதி மறுப்பு
ஆனால் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தடைகள் விதித்து வரும் காரணத்தாலும், மத்திய அரசும் இதற்கான வரைமுறை உருவாக்க விருப்பம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேற டியாஜியோ முடிவு செய்துள்ளது.
டியாஜியோ முதலீடு
2018ல் டியாஜியோ கைப்பற்றிய 26 சதவீத பங்குகளைத் தற்போது ஹிப்பார் நிறுவனத்தின் நிறுவனர் ஆன பிரசன்னா நட்ராஜன்-க்கு 98 சதவீத நஷ்டத்துடன் வெறும் 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது டியாஜியோ.
டியாஜியோ - ஹிப்பார் கூட்டணி
ஆன்லைன் மதுபான விற்பனைக்கு மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்லாமல் உள்ளூர் மதுபான கடைகளும் விருப்பம் இல்லாமலும், எதிர்ப்பு தெரிவித்து வரும் காரணத்தால் அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியாமல் டியாஜியோ - ஹிப்பார் கூட்டணி முடங்கியுள்ளது.
2020 லாக்டவுன்
2020 லாக்டவுன் காலத்தில் சில மாநிலங்களில் மட்டும் ஆன்லைன் மதுபான ஆர்டர் மற்றும் டெலிவரி சேவைக்கு அனுமதி அளித்தது. இக்காலகட்டத்தில் நாட்டின் அனைத்து துறைகளிலும் ஈகாமர்ஸ் வர்த்தகம் கணிசமான வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
27 பில்லியன் டாலர் சந்தை
இந்திய மதுபான சந்தையின் மொத்த மதிப்பு 27 பில்லியன் டாலர், ஒவ்வொரு ஆண்டும் இதன் அளவு குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனாலேயே அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, டிப்லூர் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மதுபான விற்பனை துறையில் இறங்கியுள்ளது.
பிரசன்னா நட்ராஜன்
ஆன்லைன் மதுபான விற்பனையில் முதன் முதலீல் இறங்கியது பிரசன்னா நட்ராஜன் தலைமையிலான ஹிப்பார் என்பதால் பல கடுமையான தடைகளை அரசு தரப்பில் எதிர்கொண்டது. ஆனாலும் ஹிப்பார் நிறுவனம் தனது வர்த்தகத்தை வெற்றிகரமான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications