அமெரிக்கா: உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து அமெரிக்காவின் தவிர்க்க முடியாத பெண் தொழிலதிபராக திகழும் ஒரு பெண் டையான் ஹெண்ட்ரிக்ஸ்.
இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு மற்றும் கணவர் இறப்பு என வாழ்க்கையில் பல சவால்களை கடந்து இன்றும் சாதனை பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

அண்மையில் ஹாரன் நிறுவனம் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் டையான் ஹெண்ட்ரிக்ஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக இடம் பிடித்துள்ளார். ஏபிசி சப்ளை என்ற ஹோல்சேல் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைவர் டயான் ஹெண்ட்ரிக்ஸ்.
இவரது சொத்து மதிப்பு 1.8 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஏபிசி சப்ளை என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய ஹோல்சேல் நிறுவனம் ஆகும். வீடு கட்டுவதற்கு தேவையான ஜன்னல்கள் மற்றும் மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை ஹோல்சேலில் விற்பனை செய்கிறது ஏபிசி சப்ளை நிறுவனம். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனர் தான் டயான் ஹெண்ட்ரிக்ஸ். அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரை சேர்ந்தவர்.
அவரது தந்தை ஒரு பால் வியாபாரி ஆவார். 17 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டதால் படிப்பை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த மண வாழ்க்கை நீடிக்கவில்லை. பின்னர் ஒரு பிளேபாய் கிளப்பில் வேலைக்கு சென்றார்.
தொழில் தொடங்குவதில் ஆர்வம் இருந்ததால் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்தார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டினை வடிவமைத்து விற்பனை செய்யும் முறையை அறிமுகம் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் தவிர்க்க முடியாத ஒரு நபராக டயான் என்று உருவெடுத்தார்.
டயான், ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த கென் ஹெண்ட்ரிக்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து வங்கியில் கடன் வாங்கி கூட்டாக ஏபிசி சப்ளை என்ற வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை ஹோல்சேலில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தை 1982 ஆம் ஆண்டில் நிறுவினர்.
இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பாக இருவரும் இருநூறு பழைய வீடுகளை வாங்கி அவற்றை மறுசீரமைப்பு செய்து மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு லாபமாக கிடைத்தது. இதுவே தனியாக தொழில் தொடங்கும் ஊக்கத்தையும் கொடுத்தது. தற்போது வரை இந்த நிறுவனத்தை செவ்வனே நடத்தி வருகிறார் டயான்.
வாழ்க்கையில் பல சவால்களை கடந்து சாதித்த பெண்மணி இவர். இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு மற்றும் கணவரின் இறப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை வாழ்க்கையில் சந்தித்தவர். 33 வயதில் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்தார்.
69 வயதில் மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த அவருக்கு கணவரின் திடீர் மரணமும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் அவற்றை திறமையாக கடந்து வந்துள்ளார்.
அமெரிக்க அரசியலிலும் இவரது பெயர் பரவலாக அறியப்பட்டுள்ளது. குடியரசு கட்சிக்கு பெருமளவில் நிதி உதவி செய்திருப்பவர். 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்புக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை நன்கொடையாக வழங்கினார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications