விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா நடிகர் தனுஷ்? ரசிகர்களிடம் பேசிய வீடியோ வைரல்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகவும் தனக்கென தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனி முத்திரை பதித்தவர். ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், பாடல் ஆசிரியர், பாடகர் என பல அவதாரம் கொண்டவர் தனுஷ். இவர் வழக்கமாக மேடைகளில் பேசும் போது ரசிகர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்குவார். இதனாலே இவரது மேடை பேச்சுகள் பெருமளவில் கவனிக்கப்படும். அந்த வகையில் தனுஷ் அண்மையில் ரசிகர்களிடம் பேசிய ஒரு வீடியோ வைரலாகி தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விஜயை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா நடிகர் தனுஷ்? ரசிகர்களிடம் பேசிய வீடியோ வைரல்..!!

நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் கர திரைப்படம் வெளியானது. தனுஷ் ஜூலை 28ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளார்.

Also Read

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்த தான நிகழ்வில் தனுஷ் பங்கேற்றார்.அப்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாக உள்ளது. அதில் அவர் "இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னை சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்க கூடாது. உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பிரச்சினை இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனை செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி, ஓம் நமச்சிவாய.. ஜெ.." என தெரிவித்துள்ளார்.

அதாவது தனது ரசிகர் மன்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது, மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்ய உதவுங்கள் என கூறி இருப்பது தனுஷ் அரசியல் வருகையை மனதில் வைத்து அப்படி கூறினாரா என கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் விஜய் , முதலில் தனது ரசிகர் மன்றம் மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து அதன் மூலமாகவே படிப்படியாக தவெக என்ற கட்சியை தொடங்கினார்.

Recommended For You

விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவு தான் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். அந்த வகையில் தனுஷும் அப்படி ஒரு பாதையை தேர்வு செய்ய போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக வாக்குறுதி தந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்நிலையில் மருமகன் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா என பலரும் விவாதித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+