மும்பை: மே 31 ஆம் தேதி, இந்திய பங்குச் சந்தைகளில் திடீர் பரபரப்பு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையில் (NSE) வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட பங்குகளின் மதிப்பு அதற்கு முந்தைய நாளை விட இரட்டிப்பாக அதிகரித்தது. ஒரே நாளில் பங்கு வர்த்தகம் இவ்வளவு பெரிய அளவில் அதிகரிப்பது மிகவும் அரிதான விஷயம். உதாரணமாக, 2020 மார்ச் 12ஆம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய பெருந்தொற்று (pandemic) என்று அறிவித்தபோது, பங்குச் சந்தை, அதற்கு முந்தைய நாளை விட 22 சதவீதம் அதிகரித்தன. ஆனால் அப்போது இதுபோன்ற இரட்டிப்பு வளர்ச்சி அடையவில்லை. அதே போல, 2014ஆம் ஆண்டு, மே 16 ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் 30 ஆண்டுகளில் முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார், அப்போதும் இரட்டிப்பு வளர்ச்சி ஏற்பட்டது.
இதில் பலருக்கும் ஏற்படும் கேள்வி என்னவென்றால் மே 31ஆம், தேதி 2024 அன்று பங்குச்சந்தை இரட்டிப்பாக உயர என்ன காரணம் என்பது தான். எதுவுமில்லை, தேர்தல் வாக்குப்பதிவின் இறுதி கட்டத்திற்கு முந்தைய நாள் என்பது மட்டுமே, இது முன்கூட்டியே தெரிந்த ஒரு விவரம்.
மே 31ஆம் தேதி, எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு தீவிர வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் யார்? முதலீட்டாளர் விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை NSE வெளியிடவில்லை என்றாலும், சில்லறை முதலீட்டாளர்கள், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடவடிக்கையை NSE வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மே 31ஆம் தேதி, பங்குகளை வாங்கியதில் 58 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களே காரணமாக இருந்தனர் என்பது தெரியவந்தது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் அதற்கு அடுத்த நாள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முடிவுகளும் பிஜேபி கூட்டணிக்கு திட்டவட்டமான வெற்றியை கணித்தன. சிலர் 400 இடங்கள் வரை கணித்தனர். கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கணிப்பது இதுவே முதல் முறை. ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய நாள், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும், அவற்றின் ஊடக நிறுவனங்களும் மட்டுமே கணிப்புகளை தெரிந்திருந்தன. மேலும்,அவை வெளியிடப்படுவதற்கு முந்தைய நாளில் பங்குச்சந்தை செயல்பாடு எப்படி இரட்டிப்பாகியது? பல கருத்துக்கணிப்புகள் மோடிக்கு மகத்தான வெற்றியை அறிவிப்பதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக, பங்குச்சந்தை வர்த்தகம் இரட்டிப்பாவது மிகவும் அரிதான நிகழ்வு. எனவே இது தற்செயலாக இருக்க முடியாது.. என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வார இறுதிக்குப் பிறகு ஜூன் 3ஆம் தேதி பங்குச் சந்தை மீண்டும் திறக்கப்பட்ட போது, எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின் மூலம் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டது. அதன் காரணமாக பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்தது. மே 31 அன்று திடீரென பெரிய அளவிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கினர். ஜூன் 4-ம் தேதி உண்மையான முடிவுகள் அறிவிக்கப்படும் போது, பங்குச்சந்தை சரிந்தது. அன்றைய தினம் ரூ. 30 லட்சம் கோடி மதிப்பை இழந்தது. அதன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, இது கடுமையான வீழ்ச்சியாகும். அந்த நேரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை விற்று பெரும் லாபம் பார்த்தனர். பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்கள் சரிவை கண்டனர். மேலும் பெரும் இழப்பையும் சந்தித்தனர்.
பிஜேபிக்கு வெற்றி கணிக்க படவில்லை என்றால், ஜூன் 3ஆம் தேதி பங்குச்சந்தை இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது அதன் விளைவாக ஜூன் 4ஆம் தேதி வீழ்ச்சி அடைந்தது. மொத்தத்தில் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஏற்பட்ட நாளில் சந்தேகத்திற்கு இடமான மற்றும் மர்மமான பங்குச்சந்தை செயல்பாடுகள் இருந்தன. இதன் மூலம் வெளிநாட்டு முதலீடாளர்கள் ஆதாயம் அடைந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான இந்திய சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய செல்வத்தை இழந்தனர் என்பது தரவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இதில் விடை தெரியாத சில கேள்விகள் எழுகின்றன. அவை
1. மே 31ம் தேதி இந்திய பங்குச் சந்தையில் பெரும் தொகையை முதலீடு செய்த இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார்?
2. அவர்கள் தேர்தல் கணிப்பு முடிவுகளை முன்கூட்டியே அறிந்து, அதன் அடிப்படையில் லாபம் ஈட்டினார்களா?
3. தேர்தல் கணிப்பு நடத்தியவர்களுடனோ அல்லது ஊடக நிறுவனங்களுடனோ இவர்களுக்கு தொடர்பு இருந்ததா?
4. இவர்கள் யாருடைய பணத்தை முதலீடு செய்தார்கள்?
5. இந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த முதலீட்டாளர்கள் எவ்வளவு லாபம் ஈட்டினார்கள்?
இது போன்ற கேள்விகளுக்கான விடை இன்னும் மர்மமாகவே உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications