இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது முதலில் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே பாகிஸ்தான் வட இந்தியாவில் இருக்கும் ராணுவ தளங்களை குறிவைத்து வியாழக்கிழமை அன்று இரவு திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் தான் பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா தன்னுடைய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியா?
கடந்த 22ஆம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கர்வார் துறைமுகத்தில் இருந்து அரபிக் கடலை நோக்கி பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே பதில் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கராச்சி துறைமுகம் அமைந்திருக்கும் பகுதியில் பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. அதே போல சைரன் ஒலி கேட்டதாகவும் சுற்றுப்புறங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
Daijiworld என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி இந்திய கடற்படை தன்னுடைய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மூலம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தின் மீது பயங்கர தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு போருக்கு பிறகு பாகிஸ்தானின் துறைமுகத்தை குறிவைத்து இந்தியா நடத்த மிகப்பெரிய தாக்குதல் இது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து பல்வேறு போர் விமானங்கள் செலுத்தப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கராச்சி துறைமுகத்திற்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கராச்சி துறைமுக அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?
பாகிஸ்தானின் 60 சதவீத வர்த்தகத்தை கராச்சி துறைமுகம் தான் கையாளுகிறது. இந்த நிலையில் கராச்சி துறைமுக துறைமுகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வெளியிட்டு இருக்கும் பதிவில் இந்திய ஊடகங்களில் கராச்சி துறைமுகத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் கராச்சி துறைமுகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன அது முழுக்க முழுக்க போலியானது அடிப்படை ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி துறைமுகம் வழக்கம் போல செயல்படுகிறது பாதுகாப்பாக இருக்கிறது என கூறுகிறது.
இந்தியா என்ன சொல்கிறது?
இதனிடையே மத்திய அரசு சார்பாகவும் கடற்படை சார்பாகவும் இதுவரை பாகிஸ்தான் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications