அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எச்சரிக்கை விடுத்ததலை போலவே வர்த்தக போரை தொடங்கிவிட்டார். சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதியை வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க நலன்களை சீர்குலைக்கும் வகையில் இந்த நாடுகளின் செயல்பாடுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் இருப்பதாக தொடர்ந்து கூறி குற்றம்சாட்டி வருபவர் டிரம்ப். இந்நிலையில் தான் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியும் ,சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதித்துள்ளார்.

நல்வாய்ப்பாக டிரம்ப் இந்த உத்தரவில் இந்தியா குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கின்றன, அதை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா ,இந்தியா, ஈரான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்களின் சொந்த நாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன, இந்த நிலை நீடித்தால் இந்த கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளின் பொருட்கள் மீதும் 100% இறக்குமதி வரியை விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அமெரிக்க மக்களின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தன்னுடைய நிர்வாகம் கடுமையான வர்த்தக நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளும் என டிரம்ப் கூறியிருந்தார். தன்னுடைய முதல் கட்ட வர்த்தக போரை சீனா , மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் மீது தொடுத்துள்ளார்.
ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னால், ஃபென்டனையில் எனப்படும் போதை மருந்து முக்கிய காரணம். சீனாவில் இதற்கான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு மெக்சிகோ வழியே கனடாவந்து அங்கே போதை மருந்தாக மாறி அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறதாம். இதற்கு எதிராகவே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.
தற்போதைக்கு இந்தியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மத்திய அரசு டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கத்துடன் செயல்பட முன் வந்திருப்பது ஒரு காரணமாக கூறலாம். டிரம்ப் தன்னுடைய முதல் பதவி காலத்தில் சீனா மீது மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் இந்தியாவின் வர்த்தக போக்கையே மாற்றி அமைத்தன என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வர்த்தகப் போக்கையே மாற்றி அமைக்கும், அந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. அதே சமயம் டிரம்ப் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளையும் வரி நடைமுறைகளையும் தொடர்ந்து சாடி வருகிறார். அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதால் இந்தியா சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications