ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். நீரஜ் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள லாட்சோலி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான ஹிமானி மோரை மணந்தார். இவர் ஒரு டென்னிஸ் வீராங்கனை. இவர் ஃபிராங்க்ளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர டென்னிஸ் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
27 வயதான நீரஜ் தனது திருமண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஜனவரி 14-ஆம் தேதி அன்று திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியது. ஜனவரி 15-ஆம் தேதி அன்று ஹல்தி விழா நடந்தது. அதைத் தொடர்ந்து மெஹந்தி மற்றும் டிஜே போன்ற இரவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஜனவரி 16-ஆம் தேதி அன்று திருமண விழா நடைபெற்றது. மணமக்கள் சார்பில் சுமார் 60 நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாகவே நடந்து வந்தன. நீரஜ் 2016-ஆம் ஆண்டு ஜூனியர் உலககோப்பை பட்டத்தை வென்றதிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகமாக பின் தொடரப்படும் நபர்களில் ஒருவராக இருந்தார். அப்படி இருந்தும் திருமண ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்தது.
வரதட்சணை: நடந்து முடிந்த திருமணத்திற்காக நீரஜ் சோப்ரா, எந்த வரதட்சணையும் ஏற்கவில்லை என்று தைனிக் பாஸ்கர் செய்தி வெளியிட்டுள்ளது. ஹரியானாவில் முறைப்படி நடந்து முடிந்த இந்த திருமணத்தில் நீரஜ் சோப்ரா 1 ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஹிமானி மோரின் பெற்றோரான பாஸ்கர் மற்றும் மீனாவின் கூற்றுப்படி, இந்தத் தம்பதியினர் வெறும் 1 ரூபாய்க்கு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல குடும்பங்களுக்கு இடையில் எந்தவித ஆடைகள் அல்லது பரிசுகளும் பரிமாறப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஹரியான்விகளின் பாரம்பரிய ஆடைகளை பின்பற்றி இந்த திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமண முறையின் படி ஆண்கள் வேட்டி மற்றும் குர்த்தாக்களை அணிய வேண்டும். பெண்கள் காக்ரா, டாமன் மற்றும் காந்தி ஆகியவற்றை அணிய வேண்டும். அதே முறையில் தான் நீரஜ் சோப்ரா மற்றும் ஹிமானி மோர் ஆகியோரின் திருமணம் நடந்தது.
திருமண விழா ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்தது. ஹிமானி மோரின் தாய் மீனா மோர், இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்து வைத்திருந்ததாகவும், கடவுளின் அருளால் தன் மகள் நாட்டின் பெருமைமிகு ஒருவரை மணக்கிறார் என்றும், இரு குடும்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications