ஜெர்மனி அரசின் புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகள் படி அந்நாட்டின் பொருளாதாரம் மார்ச் காலாண்டில் எதிர்மறையான வளர்ச்சி அதாவது மைனஸ் அளவில் ஜிடிபி அளவீட்டை பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதத்தில் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் -0.3 சதவீதம் சரிந்துள்ளது.

ரெசிஷன் என்றால் என்ன..?:
ஒரு நாடு ரெசிஷனுக்குள் செல்கிறது என்றால் தொடர்ந்து 2 காலாண்டாக அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் நிலையில் சென்றால் மட்டுமே ரெசிஷன் என அறிவிக்கப்படும். இந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் அதாவது டிசம்பர் காலாண்டிலும் ஜெர்மனி பொருளாதாரம் -0.5 சதவீதமாக இருந்தது.
ஜெர்மனி மாட்டிக்கொண்டது:
இதன் மூலம் ஜெர்மனி நாட்டின் ஜிடிபி டிசம்பர் காலாண்டிலும், மார்ச் காலாண்டிலும் மைனஸ் அளவில் சென்று அதிகாரப்பூர்வமாக ரெசிஷனுக்குள் நுழைந்துள்ளது. இதோடு ஜெர்மனி நாட்டில் ஒரு குடும்பம் வாங்கும் பொருட்களின் அளவும் டிசம்பர் காலாண்டுக்கும், மார்ச் காலாண்டுக்கும் 1.2 சதவீதம் குறைந்துள்ளது.
Household spending dips:
அதாவது ஜெர்மனி நாட்டு மக்கள் உணவு, ஆடை, வீட்டு சாமான்களுக்காக செலவிடப்படும் தொகையை மார்ச் காலாண்டில் 1.2 சதவீதம் குறைத்துள்ளனர். இதே காலக்கட்டத்தில் ஜெர்மனி அரசு செலவு செய்யும் அளவீடும் 4.9 சதவீதம் குறைந்துள்ளது, இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு விகித்துள்ளது.
பணவீக்கம் உயர்வு :
ஜெர்மனி நாட்டில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து ஏப்ரல் மாதம் அதிகப்படியாக 7.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது 2022 உச்ச அளவை காட்டிலும் சற்று குறைவானது என்றால் மிகையில்லை.

ரஷ்யா தான் காரணமா:
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய நாளில் இருந்து ஜெர்மனி ரஷ்யா மீது கடுமையாக தடைகளை விதித்து வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவுக்கும், ரஷ்யர்களுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துக்களை கைப்பற்றி வருகிறது. இது ரஷ்யாவுக்கும் பெரிய பிரச்சனையாக மாறியது.
ரஷ்யாவின் பதிலடி:
ஜெர்மனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மொத்தமாக தடை செய்யப்பட்டது. இதனால் ஜெர்மனி நாட்டின் அனைத்து விதிமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தான் ஏப்ரல் மாதம் ஜெர்மனி நாட்டின் பணவீக்கம் அதிகப்படியாக 7.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ஜெர்மனி அரசுக்கு செக்:
ஜெர்மனி அரசு கடந்த மாதம் தான் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பு செய்தது, 0.2 சதவீதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 0.4 சதவீதமாக உயர்த்தியது. தற்போது ஜெர்மனி பொருளாதாரம் ரெசிஷனுக்கு நுழைந்துள்ள காரணத்தால் மீண்டும் கணிப்பை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அடுத்தது பிரிட்டன்?:
சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் பிரிட்டன் ரெசிஷனுக்குள் நுழையும் என கணிக்கப்பட்டதை திரும்பப்பெற்றுள்ளது. இதேவேளையில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட G7 நாடுகளின் பிரிட்டன் முக்கியமானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications