கிங் ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா என்றாலே நம் மனதில் தோன்றும் விஷயம் அவர் இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடிக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் என்பது தான்.
ஆனால் விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு தான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி விட்டதாக கூறுகிறார். ஆனால் வங்கிகள் இதனை மறுக்கின்றன . விஜய் மல்லையா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் "நான் இந்தியாவில் வங்கிகளிடம் வாங்கி இருந்த கடனை வட்டியோடு முழுமையாக திரும்ப செலுத்தி விட்டேன் என கூறியுள்ளார். வங்கிகள் இது போன்ற வழக்குகளில் முழுமையான தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றுவிட்டதாக ஒரு உதாரணத்தையாவது கூற முடியுமா " என கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் மல்லையாவை தனக்கு 28 வயதாகும்போதே யுனைடெட் பிரீவரீஸ் குழுமத் தொழிலை கையில் எடுத்துக் கொண்டார் . பின்னர் நிறுவனத்தின் பெயரை கிங் ஃபிஷர் பியர் என மாற்றினார். 2005 ஆம் ஆண்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸை அறிமுகம் செய்தார். இந்தியாவின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனமாக கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் மாறியது. 2008 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது விமான எரிபொருட்களின் விலைகள் பட மடங்கு உயர்ந்தன.
அந்த சமயத்தில் விஜய் மல்லையா நஷ்டத்தில் இருந்த ஏர் டெக்கன் என்ற விமான சேவை நிறுவனத்தை வாங்கினார். இதனை வாங்கிய பிறகு தான் விஜய் மல்லையாவின் இறங்குமுகம் தொடங்கியது. ஏற்கனவே நஷ்டத்தில் இருந்த நிறுவனத்தை வாங்கிய அவரால் அதனை திறமையாக செயல்படுத்த முடியவில்லை .இதற்கான செயல்பாடு செலவினங்கள் அதிகரித்தன, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, கடன் தொகை ஏறிக்கொண்டே சென்றது. பின்னர் 2012 ஆம் ஆண்டு இந்த விமான சேவை நிறுவனமே முழுவதுமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் விஜய் மல்லையா இந்தியாவை சேர்ந்த சுமார் 17 வங்கிகளிடம் இருந்து 9000 கோடி கடனாக வாங்கினார். இவற்றில் பெரும்பாலான பணத்தை இவர் தன்னுடைய விமான சேவை நிறுவனத்திற்கு பயன்படுத்தாமல் தனிப்பட்ட கணக்குகளுக்கும், ஷெல் நிறுவனங்களுக்கும் , வெளிநாட்டிற்கும் அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் வங்கிகள் கொடுத்த கடனை திரும்ப கேட்டபோது விஜய் மல்லையாவால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனிடையே விஜய் மல்லையா மீது வங்கிகள் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. விஜய் மல்லையா 1200 கோடி ரூபாய் வட்டியுடன் மொத்தமாக இந்தியாவை சேர்ந்த வங்கிகளுக்கு 6,203 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என அறிவித்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். இதனை அடுத்து அவரை பொருளாதார குற்றவாளி என மத்திய அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்த அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிரிட்டனிலேயே சில சமயம் அவர் கைதும் செய்யப்பட்டார், பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது மல்லையாவிடம் இருந்து மட்டும் 14 ,131 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இவை அனைத்தும் அவர் கடன் வாங்கிய வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டதாக கூறினார்.
இதனை அடுத்து தான் விஜய் மல்லையா இந்தியாவை சேர்ந்த வங்கிகள் நான் வாங்கிய கடன் பணத்தை விட அதிகமான தொகையை திரும்பப் பெற்று இருக்கின்றன குறிப்பிட்டார். இருந்தாலும் என்னை குற்றவாளியாகவே வைத்திருப்பது நியாயமா என்றும் வினவினார். ஆனால் வங்கிகள் 14,131 கோடி ரூபாய் பணத்தை பெற்றிருந்தாலும் விஜய் மல்லையா வாங்கிய முழு கடன் தொகையும் தங்களுக்கு வந்து சேரவில்லை என இன்னும் கூறி வருகின்றன.இந்த சூழலில் தான் விஜய் மல்லையா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வங்கிகள் திரும்ப பெற்ற தொகை குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications