UPI மூலம் அதிக தொகை அக்கவுண்டுக்கு வந்தால் நோட்டீஸ் வருமா? வருமான வரித்துறையின் வரம்பு என்ன?

இன்றெல்லாம் பெரும்பாலானோர் சின்ன கடை தொடங்கி பெரிய கடை வரை எங்கு சென்றாலும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ தளங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, பணம் பெறுவது என எல்லாமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. நம் வங்கி கணக்கிற்கு யுபிஐ மூலமாக வரும் பணத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்புமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.

யுபிஐ மூலம் அதிக பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்தால் வருமானவரித்துறை கண்காணிக்குமா?: யுபிஐ மூலம் அதிக அளவிலான தொகை உங்களுக்கு அனுப்பப்படும் போது உடனடியாக நோட்டீஸ் எதுவும் வராது.

உதாரணமாக சம்பளம் பெறும் ஒரு நபர் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் என்று ஐடிஆர் தாக்கல் செய்யும்போது கணக்கு காண்பிக்கிறார். ஆனால் அந்த வருடமே அவருடைய அக்கவுண்டில் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான ட்ரான்ஷாக்ஷன் நடந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதில் அவர் குடும்பத்தினர் அனுப்பிய பணம், நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட பணம், வியாபார வருமானம் என அனைத்தும் அடங்கலாம்.

UPI மூலம் அதிக தொகை அக்கவுண்டுக்கு வந்தால் நோட்டீஸ் வருமா? வருமான வரித்துறையின் வரம்பு என்ன?

இப்படி அக்கவுண்டுக்கு வரும் தொகை அனைத்தும் சட்டபூர்வமானது தான் என்றாலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வரும் போது அக்கவுண்டுக்கு வந்த பணம் யாரிடமிருந்து வந்தது? எங்கிருந்து வந்தது? என்பதற்கான சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் வருமான ஆதாரத்தை காண்பிக்க முடியவில்லை என்றால் அங்கு தான் பிரச்சனை தொடங்கும்.

Also Read

1 பைனான்ஸ் நிறுவனத்தின் வரிப் பிரிவு தலைவரான பராக் ஜெயின் கூறுகையில்.. வருமானவரிச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவுதான் யுபிஐ பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு தான் வரம்பு இருக்கிறது. அதாவது ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது. அதேபோல கரண்ட் அக்கவுண்டாக இருந்தால் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் வங்கிகள் அந்த வாடிக்கையாளரின் தகவல்களை வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த வரம்பு யுபிஐ, NEFT, RTGS அல்லது IMPS போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கிடையாது.

இதற்காக எப்போதுமே டிஜிட்டல் பரிவர்த்தனையை வருமானவரித்துறை கண்காணிக்காது என்று நினைக்கக் கூடாது. வரி சோதனையின் போது உங்கள் வங்கி கணக்கு அறிக்கைகள் ஆய்வு செய்யப்படும். அப்போது உங்கள் வருமானத்திற்கு அப்பால் அதிக அளவிலான தொகை கணக்கில் இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் கேட்க வாய்ப்புள்ளது.

வருமான வரி சட்டம் 2025 பிரிவு 102-இன் கீழ் உங்கள் அக்கவுண்டுக்கு வரும் பணத்திற்கு உரிய ஆதாரம் என்ன என்பதை நீங்கள் விளக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தொகையின் அளவு முக்கியம் கிடையாது. 60,000 ரூபாயாக இருந்தாலும் சரி.. 6 லட்சம் ரூபாயாக இருந்தாலும் சரி.. அந்த தொகைக்கான ஆதாரம் என்ன என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதை செய்யாத சுமார் 13,000-திற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டில் கர்நாடக ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

பணத்தைப் பெற்று வேறு ஒருவருக்கு அனுப்புவதால் பிரச்சினை ஏற்படுமா?: நண்பர்களுடன் சேர்ந்து கிப்ட் வாங்குவதற்கு, ஹோட்டலில் சாப்பிடுவதற்கு என பெரும்பாலான நேரங்களில் பலரிடமிருந்து பணத்தைப் பெற்று பின்பு வேறு ஒருவருக்கு அனுப்புகிறோம். இது பெரும்பாலானோர் செய்யும் விஷயம்தான்.

இது உங்களுக்கு நியாயமானதாக இருந்தாலும் தொடர்ந்து இப்படி பணத்தை பெறுவது நிதி மோசடி செயல்களில் ஈடுபடுபவர்களின் நடத்தையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகள் மற்றும் புலனாய்வு முகமைகள் உங்களை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கும். வருமானவரி துறையை பொறுத்தவரையில் பணம் சட்டபூர்வமாக வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டாலும் அது எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது? யாருக்கு அனுப்பப்பட்டது? என்ற விவரங்களை வழங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+