வைரங்கள் பொதுவாக பெண்கள் விரும்பும் மதிப்புமிக்க பொருட்களில் ஒன்று. இவை தங்கத்தை விட சற்று விலை அதிகம். வைரக் கற்களை வைத்து பலவிதமான ஆபரணங்களை செய்யலாம். விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வைரங்கள் அரிதான ஒன்றாகவே நம்பப்படுகிறது. ஆனால் இது உண்மையா? ஏன் வைரங்கள் இவ்வளவு விலை உயர்ந்தவையாக இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உண்மையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கங்கள் மட்டுமே மனித குலத்தின் தேவையைப் பல மடங்கு பூர்த்தி செய்யும் அளவுக்கு வைரங்களை கொண்டுள்ளன. பூமியில் அவ்வளவு வைரங்கள் உள்ளன. சில வகை வைரங்கள் உயர்ந்த மதிப்பையும், சில வகை வைரங்கள் குறைந்த அளவிலான மதிப்பையும் கொண்டிருக்கும். எனவே பூமியில் உள்ள இந்த வைரத்தை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைப்பிடி கொடுத்தாலும் போதுமானதாக இருக்கும் அளவிற்கு நம் பூமியில் வைரங்கள் இருக்கின்றன.

அப்படி இருந்தும் ஏன் அவை விலை உயர்ந்தவை மற்றும் அரிதான ஒன்றாக கருதப்படுகின்றன தெரியுமா? இந்த வைரங்களில் பெரும்பாலானவை நகைகளாக விற்கப்பட வேண்டிய உயர்தரத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கும் வைரங்களாகும். ஒரு வைரம் பொதுவாக 4 C-ளைக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும். அவை கேரட், கலர், கட் மற்றும் கிளாரிட்டி.
வைரங்கள் இந்த விரிவான செயல்முறையை முடித்த பிறகு தான் விற்பனைக்கு செல்கின்றன. மேலும் மிகவும் குறைபாடுள்ள வைரங்கள் நீக்கப்பட்டு இந்த 4 விஷயங்களையும் பூர்த்தி செய்யும் வைரங்களே நகை கடைக்கு செல்கின்றன.
19-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வைரங்கள் உண்மையிலேயே அரிதாகத்தான் இருந்தன. ஆனால் 1870-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பாரிய வைரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு வைரங்கள் பொதுவானதாகவும் விலை உயர்ந்ததாகவும் மாறியது.
அப்போது தான் டி பீர்ஸ் கன்சோலிடேட்டட் மைன்ஸ் லிமிடெட் வைர சந்தைக்குள் நுழைந்தது. டி பீர்ஸ் வைர வர்த்தகத்தின் கட்டுப்பாட்டை எடுத்து, வைர வர்த்தகத்தின் முழு பொறுப்பையும் ஏற்று விநியோகத்தை நிர்வகித்து விலை நிலையாக இருப்பதை உறுதி செய்தார். ஆனால் தோண்டி எடுக்கப்பட்ட வைரங்களில் சுமார் 20% மட்டுமே தரம் வாய்ந்தவை.
இதை கருத்தில் கொண்டு தான் பல உயர்தர வைர நகை பிராண்டுகளில் காட்டப்படும் வைரங்கள் விலை உயர்ந்ததாக உள்ளன. இதிலிருந்து ஏன் வைரங்கள் அரிதாக காணப்படுகின்றன என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications