டெல்லி: உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆன எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் சேர்த்து, தற்போது ட்விட்டரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமே 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ட்விட்டரை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கினார் எலான் மஸ்க்.
எனினும் அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனம் போலி கணக்கு குறித்தான தரவினை தர மறுப்பதாக, எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார்.
கையகப்படுத்தல்
இதன் பிறகு ட்விட்டர் நிறுவனம் போலி கணக்கு விவரங்களை அளிக்கத் தவறினால், இந்த ஒப்பந்ததை கைவிடப் போவதாக எலான் மஸ்க் அறிவித்ததையடுத்து நீதிமன்றத்தை அணுகியது ட்விட்டர். இதனை அடுத்து எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது ட்விட்டர் நிறுவனம். இந்த நிலையில் தான் தற்போது எலான் மஸ்க் வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.
பணத்திற்காக ட்விட்டரை வாங்கவில்லை
எலான் மஸ்க் வெற்றிகரமாக கையகப்படுத்துவதற்கு முன்பு, அதன் விளம்பரதாரர்களுக்கு ஒரு குறிப்பினை பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நான் பணத்திற்காக ட்விட்டரை வாங்கவில்லை. நான் மனித குலத்திற்கு உதவ முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த இலக்கை அடைவதில் அவர் தோல்வியுற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. .
இன்னும் சவால்கள் வரலாம்
ட்விட்டரின் எதிர்கால நோக்கத்தினை பற்றிய விளக்கிய மஸ்க், ட்விட்டரை அனைவருக்கும் இலவச காட்சியாக மாற முடியாது. எந்த விளைவும் இல்லாமல் எதையும் சொல்ல முடியும் என கூறியுள்ளார். இது எதிர்காலத்தில் இன்னும் பல மாற்றங்களை ட்விட்டர் எதிர்கொள்ளலாம் என்பதை மறைமுகமாக சொல்கிறதோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
என்ன வீடியோ அது?
இது மட்டும் அல்ல எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர் அலுவலகத்தில் வாஷிங் பேஷனுடன் நுழைந்த வீடியோவினையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த எலான் மஸ்க், அதற்கு தலைப்பு வைத்திருந்ததில் பல உள் அர்த்தங்கள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ட்விட்டரை ஏன் வாங்குகிறேன்
ட்விட்டரை ஏன் வாங்குகிறேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள எலான் மஸ்க், ட்விட்டர் ஒரு பொதுவான தளம். எல்லோருடைய கருத்துகளையும், நம்பிக்கையையும் பகிர்ந்து ஆரோக்கியமான முறையில் விவாதிக்க ஒரு தளம் தேவை என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications