பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை அதிகளவில் வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்குகிறது. வளைகுடா நாடுகளில் கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் ஆக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மாத காலமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வராமல் தடைபட்டுள்ளது. இந்தியா தற்போது ரஷ்யா போன்ற பிற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும் , வளைகுடா நாடுகள் மற்றும் ஈரானில் இருந்து கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெய் தான் இந்தியாவிற்கு லாபகரமானது. வழக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது எல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விடும்.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

கடந்த ஒரு மாத காலமாக கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது ,கச்சா எண்ணெய் வரத்தும் குறைந்திருக்கிறது. இருந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் அந்த நிதி சுமையை பொதுமக்கள் மீது சுமத்தவில்லை. இதற்கு காரணம் மத்திய அரசு எடுத்த ஒரு முக்கியமான நடவடிக்கை தான். சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் சாமானிய மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் பதிவில் இந்தியாவில் மக்கள் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி விலை நிலவரத்தின்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 94.77 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 87.67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை 100% உயர்ந்திருந்தும், இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 24.40 ரூபாய்க்கும், ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 104.99 ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சுமை மக்கள் மீது திணிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

அரசு சொல்லும் இந்த கணக்கு படி பார்த்தால் இந்தியாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 119.17 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசலின் விலை 192.66 ரூபாயாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசின் நடவடிக்கைகள் அந்த நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தவிடாமல் தடுத்திருக்கிறது என தெரிவித்திருக்கிறது.

Also Read

ஈரான் போர் தொடங்கியது முதல் இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது, அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் விலை லேசாக அதிகரிக்கப்பட்டது. பிரீமியம் பெட்ரோல் விலை மட்டுமே 2 ரூபாய் உயர்ந்துள்ளது. சாமானிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் சாதாரண பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல் , டீசல் விலை 30லிருந்து 50% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

Recommended For You

இதற்கிடையே எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாக பெரும் நஷ்டம் அடைவதாக எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. டீசலுக்கான வரி முழுவதும் நீக்கப்பட்டது, பெட்ரோலுக்கு 3 ரூபாய் என்று மாற்றியமைத்தது. எண்ணெய் நிறுவனங்களின் நிதி சுமையை குறைக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+