டீசல்-இன் அவசியம் இனி இல்லை.. இந்தியாவில் புதிய மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா கச்சா எண்ணெய் வளம் மிகவும் குறைந்த அளவில் கொண்டுள்ள நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் பல பில்லியன் டாலர் மதிப்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து இங்குச் சுத்திகரிப்புச் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக இந்தியாவில் கச்சா எண்ணெய் வளமே இல்லை என்று நினைக்க வேண்டாம் போதிய அளவில் இல்லை என்பதே உண்மை.

 

இந்நிலையில் விரைவில் இந்தியாவில் டீசலின் தேவை இல்லாத நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் தெரியுமா..?

முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

இந்தியாவில் தற்போது கார் தயாரிப்பு மற்றும் பயன்பாடு அனைத்தும் பெட்ரோல் மையப்படுத்தித் தயாரிக்கத் துவங்கப்பட்டு உள்ளது, அதேபோல் டீசலை அதிகளவில் பயன்படுத்தும் லாரி, டிரக் போன்றவற்றுக்குத் தற்போது டீசல் அமைப்பை விடவும் மேம்படுத்தப்பட்ட சோலார் பம்பு அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் இனி வரும் காலத்தில் டீசல் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகிலேயே அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் இப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட்டுள்ளது மிகவும் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 

பயன்பாட்டு அளவு

பயன்பாட்டு அளவு

அதேபோல் கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டு அளவு உயர்ந்த அளவிற்கு டீசல் பயன்பாட்டு அளவு உயரவில்லை. இதற்கு வேறு சில காரணமும் உள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகம் பெய்த காரணத்தால் சுரங்கம், கட்டுமானம், சரக்கு போக்குவரத்து ஆகியவை அதிகளவில் பாதித்தது.

 

தொழிற்துறை உற்பத்தி
 

தொழிற்துறை உற்பத்தி

கடந்த 6 வருடத்தில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி அதிகளவில் குறைந்து காணப்பட்டது இந்தச் செப்டம்பர் மாதம். அதேபோல் மின்சாரப் பற்றாக்குறை அளவு அக்டோபர் மாதத்தில் 12 வருட உயர்வை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

தொழிற்துறை மற்றும் சுரங்கம் துறைகளில் இருக்கும் பிரச்சனை தற்காலிகமானது என்றாலும், வானங்களின் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

அதுமட்டும் அல்லாமல் இனி வரும் காலத்தில் கார் முதல் டிரக் வரையில் அனைத்தும் பேட்டரி மூலம் இயங்கும் என்பதால் டீசல் பயன்பாட்டு அளவில் பெரிய அளவிலான மாற்றத்தை அடுத்த 5 வருடத்தில் எதிர்பார்க்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

diesel demand is contracting in India

India's demand for diesel is slowing as the country's car fleet shifts predominantly to petrol, trucks get more efficient and solar pumps displace diesel-fed units across the countryside.
Story first published: Friday, December 6, 2019, 18:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X