ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு இந்தியாவில் அதிகளவில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இதைச் சுத்திகரிப்பு செய்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் ஐரோப்பாவிற்கு இந்தியாவின் டீசல் ஏற்றுமதி மட்டும் வியப்பு அளிக்கும் வகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் சிறந்த லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிகிறது.

எனர்ஜி கார்கோ டிராக்கர் அமைப்பான வோர்டெக்ஸா (Vortexa) வெளியிட்டுள்ள தகவல் படி, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஜூன் மாதத்தில் ஐரோப்பாவிற்கு ஒரு நாளைக்கு 119,400 பேரல் டீசலை ஏற்றுமதி செய்துள்ளன. இது மே மாதத்தில் ஒரு நாளைக்கு 24,500 பேரல் டீசல் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகும்.
இதேவேளையில் இந்தியாவின் மொத்த டீசல் ஏற்றுமதி 4% குறைந்து ஒரு நாளைக்கு 482,400 பேரல்களாகக் குறைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட டீசலின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதம் ஐரோப்பாவிற்கு மட்டும் ஜூன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஆசியாவிற்கான ஏற்றுமதி 10% குறைந்து ஒரு நாளைக்கு 107,800 பேரல்களாகவும், ஆபிரிக்கா உட்பட பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி 30% குறைந்துள்ளது.
ஐரோப்பாவிற்கு டீசல் ஏற்றுமதி செய்வது மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் காரணத்தாலும், திடீர் டிமாண்ட் உருவான காரணத்தாலும் இந்தியாவில் இருந்து அதிகப்படியான டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது, இதேவேளையில் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது லாப அளவுகள் குறைவு என்பதால் குறைக்கப்பட்டு இருக்கலாம் என வோர்டெக்ஸா அமைப்பின் ஆய்வாளர் செரீனா ஹூவாங் (Serena Huang) கூறியுள்ளார்.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் முக்கியமாக டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருட்களை உருவாக்கி கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. உலக நாடுகளில் இருக்கும் தேவை மற்றும் விலை அளவுகள் இந்திய எரிபொருள் ஏற்றுமதிக்கான இடத்தை தீர்மானிக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் நயாரா எனர்ஜி ஆகியவை டீசல் ஏற்றுமதியில் மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் ஆகும்.
2022-23 நிதியாண்டில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் டீசல் ஏற்றுமதியில் இருந்து சுமார் 29 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாய் ஈட்டின. 2024 ஆம் நிதியாண்டில் சந்தையில் எரிபொருளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் இந்த நிதியாண்டில் 22 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெற்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications