டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் விலை அதிகரிப்பு தெரியுமா?

மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மொத்த பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது சர்வதேச அளவில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் 40% அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

டீசல் விலை அதிகரிப்பு

டீசல் விலை அதிகரிப்பு

எனினும் சில்லறை பம்புகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இது மொத்தமாக வாங்கப்படும் அரசு போக்குவரத்து கழகங்கள் உட்பட மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்து துறையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு இழப்பு

தமிழக அரசுக்கு இழப்பு

இந்த விலை அதிகரிப்பு காரணமாக தமிழ் நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நாள்தோறும், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 15 - 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான டீசல் கொள்முதல் செய்து வருகின்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சில்லறை விற்பனையில் 136 நாட்களாக விலையில் பெரும் அளவிலான மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தின் மத்தியில் இந்த விலை அதிகரிப்பானது வந்துள்ளது.

2008ம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களின் போட்டியால், நாட்டில் உள்ள 1432 பெட்ரோல் பம்புகளை மூடியது. இது மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மத்தியில் ஏற்பட்ட விலை வித்தியாசத்தின் மத்தியில் பெரும் இடைவெளியினை கண்டது குறிப்பிடத்தக்கது. 

டீசல் விலை

டீசல் விலை

தற்போது மும்பையில் மொத்தமாக பயன்படுத்துவோருக்கு விற்கப்படும் டீசல் விலை லிட்டருக்கு 122.05 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பெட்ரோல் நிலையங்களில் 94.14 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. இதுவே டெல்லயில் டீசல் விலை பெட்ரோல் நிலையங்களில் 86.67 ரூபாயாக உள்ள டீசல் விலை, தொழிற்துறையில் 115 ரூபாயாகவும் உள்ளது.

நேரடியாக வாங்குவதில்லை

நேரடியாக வாங்குவதில்லை

எரிபொருட்கள் விலையானது தொடர்ந்து 5வது மாதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆர்டர் செய்யும் பஸ் ஆப்ரேட்டர்கள், மால்கள் உள்ளிட்ட மொத்த பயனர்கள், பெட்ரோல் பங்குகள் வரிசையில் நின்று சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி வந்தனர்.

யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

நயாரா எனர்ஜி. ஜியோ பிபி மற்றும் ஷெல் போன்ற தனியார் விற்பனையாளர்கள் இதனால் ,மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விற்பனை அதிகரித்த போதிலும் வருவாய் அதிகரிக்கவில்லை. ஆக தொடர்ந்து இப்படி எரிபொருளை விற்பனை செய்வதை விட பெட்ரோல் நிலையங்களை மூடுவது சிறந்த தீர்வு என்றும் ஆதாரங்கள் கூறுகின்றன.

சில்லறை விற்பனை விலையில் மாற்றமில்லை

சில்லறை விற்பனை விலையில் மாற்றமில்லை

பொதுத்துறை நிறுவனங்கள் நவம்பர் 4, 2021ல் இருந்து சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பெட் ரோல், டீசல் விலை என எதுவும் குறையவில்லை. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்ட நிலையிலும் கூட ஏற்றம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது 5 மாநிலங்களில் நடந்த முக்கிய தேர்தல் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விலை மாற்றம் செய்யப்படவில்லை

விலை மாற்றம் செய்யப்படவில்லை

அதன் பிறகு மார்ச் 10க்கு பிறகு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகாவது விலை அதிகரிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதிலும் மாற்றம் காணவில்லை. இதனால் தனியார் எரிபொருள் விற்பனையாளர்களும் அதே விலைக்கு வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

விலை அதிகரிக்க முடியாத நிலை

விலை அதிகரிக்க முடியாத நிலை

அதையும் மீறி விலையினை அதிகரித்தால் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். வாடிக்கையாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இப்படி குறைந்த விலையில் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டத்திற்கு பதிலாக, பம்புகளை நிலைமை சீரடையும் வரையில் மூடியிருப்பதே சிறந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+