மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் அனைத்து துறைகளும் அதிகளவிலான வர்த்தகத்தையும் எதிர்பார்த்து இருக்கும் வேளையில் டீசல் விலை உயர்வு அனைவருக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
ஆனால் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.
3 வருட உயர்வு
3 வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 3 வருட உச்சத்தைத் தொட்ட காரணத்தால் டீசல் விலையைக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.
டீசல் விலை மீண்டும் உயர்வு
18 நாட்களுக்குப் பின்பு வெள்ளிக்கிழமை டீசல் விலை லிட்டருக்கு 20 முதல் 25 பைசா வரையில் உயர்த்தப்பட்டது, அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், வாரத்தின் முதல் நாளே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
3 பொதுத்துறை நிறுவனங்கள்
இந்தியன் ஆயில், பார்த் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 24 முதல் 26 பைசா வரையில் உயர்த்தப்பட்டு உள்ளது.
மும்பை, சென்னை
இதன் மூலம் மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை 26 பைசா உயர்ந்து 96.94 ரூபாய்க்கும், சென்னையில் 24 பைசா அதிகரித்து 93.93 ரூபாய் என உயர்ந்துள்ளது. இதேபோல் நாட்டின் அனைத்து மாநிலம் மற்றும் பெரு நகரங்களில் இன்று டீசல் விலை உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் தான். கச்சா எண்ணெய் விலை இன்றைய வர்த்தகத்தில் 3 வருட அதாவது 2018ஆம் ஆண்டின் உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதன் எதிரொலியாக டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
எரிபொருள் தேவை
இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் விலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனாலேயே டீசல் விலை அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
இன்று ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 1.27 சதவீதம் அதிகரித்து 75 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.18 சதவீதம் அதிகரித்து 79.01 டாலருக்கும், OPEC கச்சா எண்ணெய் விலை 1.32 சதவீதம் அதிகரித்து 75.44 டாலருக்கும், இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 1.37 சதவீதம் அதிகரித்து 74.73 டாலருக்கும் அதிகரித்துள்ளது.
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னை - 93.93 ரூபாய்
டெல்லி - 89.32 ரூபாய்
கொல்கத்தா - 92.42 ரூபாய்
மும்பை - 96.94 ரூபாய்
பெங்களூர் - 94.80 ரூபாய்
ஹைதராபாத் - 97.46 ரூபாய்
கோழிக்கோடு - 94.50 ரூபாய்
இன்று பெட்ரோல் விலையில் மாற்றமில்லை
சென்னை - 98.46 ரூபாய்
டெல்லி - 101.19 ரூபாய்
கொல்கத்தா - 101.62 ரூபாய்
மும்பை - 107.26 ரூபாய்
பெங்களூர் - 104.70 ரூபாய்
ஹைதராபாத் - 105.26 ரூபாய்
கோழிக்கோடு - 101.65 ரூபாய்
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications