சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையும் குறைந்து வருகின்றது.
இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல் விலை மாறி வருகின்றது. இந்த மாதத்தில் பெட்ரோல் விலையானது 7 முறையும், டீசல் விலையானது 13 முறையும் குறைந்துள்ளது.

அதிலும் டெல்லியில் டீசல் விலையானது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக இன்று குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் செப்டம்பர் 3, 5, 7, 10, 12, 14, 15, 17,18,19,20,21 மற்றும் 22 தேதிகளில் குறைந்துள்ளது. இதே பெட்ரோல் விலையானது செப்டம்பர் 10,12,14,15,17,18 மற்றும் 22 ஆகிய 7 நாட்களும் குறைக்கப்பட்டுள்ளது. ஆக ஒட்டுமொத்தமாக டெல்லியில் பெட்ரோல் விலையானது, செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் 1.02 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே டீசல் விலையானது 2 ரூபாயும் குறைந்துள்ளது.
இதே மற்ற மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இன்று மும்பையில் பெட்ரோல் விலையானது 8 பைசா குறைந்து, 87.74 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது 14 பைசா குறைந்து, 77.73 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதே பெட்ரோல் விலையானது சென்னையில் 84.21 ரூபாயாகவும், இதே மும்பையில் 87.74 ரூபாயாகவும், டெல்லியில் 81.06 ரூபாயாகவும், பெங்களூவில் 84.21 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 84.25 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 82.59 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதுவே டீசல் விலையானது சென்னையில் 76.78 ரூபாயாகவும், இதே மும்பையில் 77.73 ரூபாயாகவும், டெல்லியில் 71.28 ரூபாயாகவும், பெங்களூவில் 75.50 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 77.72 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.80 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த விலை விகிதமானது மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபடும். ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள வரியினை பொறுத்து மாறுபட்டுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், எரிபொருள் தேவையே சற்று அதிகரித்திருந்தாலும், சர்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதனையடுத்து, இங்கு பெட்ரோல், டீசல் விலையும் குறைந்து வருகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications