நாட்கள் செல்ல செல்ல தங்கமும் எரிபொருள் விலையும் ஒன்றாகி விடும் போல. ஏனெனில் அந்தளவுக்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
தொடர்ந்து 18 நாளாக ஏற்றம் கண்டு வரும் எரி பொருட்களின் விலைக்கு மத்தியில், இன்று டீசல் விலை லிட்டருக்கு 48 பைசா அதிகரித்துள்ளது. இதே பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 79.88 ரூபாயாகவும், இதே டீசல் விலையானது லிட்டருக்கு 79.76 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச எண்ணெய் விலையினை பொறுத்து, எரிபொருட்கள் விலையினை அதிகரித்து வருகின்றன. நாட்டில் படுவேகமாக பரவி வரும் கொரோனாவின் காரணமாக, லாக்டவுன் கிட்டதட்ட மூன்று மாதங்களாக செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆக மே மாதம் தொடங்கிய நிலையில் இருந்தே சர்வதேச அளவில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எரிபொருளுக்கான தேவை நாளூக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசும் கலால் வரியினை உயர்த்தியது. தமிழகத்திலும் தன் பங்குக்கு அரசு வரியினை அதிகரித்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று பெட்ரோல் விலை 83.04 ரூபாய்க்கும், இதே டீசல் விலையானது 76.77 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சற்று குறைந்துள்ள நிலையில் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விரைவில் இது மீண்டும் உச்சம் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையானது 8 முதல் 10 ரூபாய் வரையில் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ என்ற பயத்தினையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நிபுணர்கள் மத்தியில் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.