வரலாறு காணாத உச்சத்தினை கண்ட டீசல் விலை.. பெட்ரோல் விலையும் உச்சம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனாவை விட மிக மோசமாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையானது, தொடர்ந்து 20-வது நாளாக அதிகரித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது.

வரலாறு காணாத உச்சத்தினை கண்ட டீசல் விலை.. பெட்ரோல் விலையும் உச்சம்..!

 

மேலும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் சற்று வேகம் குறைந்ததையடுத்து, அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 20 தினமாகவே பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.87 ரூபாயும், இதே டீசல் விலையானது 10.80 ரூபாய் வீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து 80 ரூபாய்க்கு மேல் உள்ளது. பெட்ரோல் விலையானது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை கண்டுள்ளது. டீசல் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கொரோனா பாதிப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் எரிபொருள் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இவ்வாறு எரிபொருள் விலையோடு, கலால் வரியாக, பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது இன்னும் கூடுதலாக அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 83.37 ரூபாயாகவும், டீசல் விலை 77.44 ரூபாயாகவும் காணப்படுகிறது.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 80.13 ரூபாயாகவும், டீசல் விலை 80.19 ரூபாயாகவும் காணப்படுகிறது.

மும்பையில் இன்று பெட்ரோல் விலை 86.91 ரூபாயாகவும், டீசல் விலை 78.51 ரூபாயாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

diesel prices hit life time high today, petrol prices also touch 19 month high. check rates here

Petrol diesel prices increased 20th consecutive day today, diesel price was hiked by 17 paise a litre, and petrol price too has gone up by 21 paise a litre.
Story first published: Friday, June 26, 2020, 10:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X