டீசல் விற்பனை 5% வீழ்ச்சி.. கேள்விக்குறியாகும் பொருளாதார வளர்ச்சி..!

கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டும் வரும் வேளையில் இந்திய வர்த்தகச் சந்தையின் முதுகெலும்பாக இருக்கும் போக்குவரத்து பெரிய அளவில் குறைந்துள்ளது டீசல் விற்பனையில் ஏற்பட்டுச் சரிவில் மூலம் வெளிப்பட்டுள்ளது. டிசல் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நாட்டின் தொழிற்துறையின் உற்பத்தி, வர்த்தகம், வளர்ச்சி ஆகியவற்றையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் -24 சதவீதம் வரியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்த நிலையில், ரிசர்வ் வங்கி high-frequency data-வை பயன்படுத்தி ஆய்வு செய்து முதல் முறையாக வெளியிட்டுள்ள 'Nowcast'அறிக்கையில், செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -8.6% வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 2 காலாண்டுகளாகப் பொருளாதாரம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகல் இந்தியப் பொருளாதாரம் ரெசிஷனுக்குத் தள்ளப்படும் அபாயம் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கும் விதமாக டீசல் விற்பனை சரிந்துள்ளது.

மாதம்

மாதம்

இந்தியன் ஆயில் கார்ப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் நவம்பர் மாதம் முதல் 15 நாட்களில் நாட்டில் டீசல் விற்பனை 5 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் சுமார் 2.86 மில்லியன் டன் டீசல் விற்பனை ஆனது ஆனால் இந்த ஆண்டு 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

40 சதவீதம்

40 சதவீதம்

இந்தியாவில் சுத்திகரிப்புச் செய்யப்பட்ட எரிபொருள் விற்பனையில் சுமார் 40 சதவீதம் டீசல் பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கும் நேரடி தொடர்புடையது டீசல் விற்பனை என்பதால் தற்போது பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சம் நிலவுகிறது.

கடந்த 8 மாதத்தில் இந்தியப் பொருளாதார அக்டோபர் மாதம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய நிலையில் தற்போது டீசல் விற்பனை சரிந்துள்ளது.

 

ரீடைல் சந்தை

ரீடைல் சந்தை

இந்தியாவில் ரீடைல் எரிபொருள் விற்பனை சந்தையில் சுமார் 90 சதவீத பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளை இந்தியன் ஆயில் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பார்த் பெட்ரோலியம் கார்ப் ஆகிய நிறுவனங்கள் கட்டுப்பட்டுப்பாடின் கீழ் உள்ளது.

இதனால் தரவுகள் துல்லியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

 

கெட்ட செய்தி

கெட்ட செய்தி

உலகில் 3வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் டீசல் விற்பனை சரிந்துள்ளது என்பது கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களுக்கும் சோகமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

பொதுவாகத் தீபாவளி முன்பு நாட்டில் டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை அதிகரிக்கும் பண்டிகை காலத்திற்குப் பின் கணிசமாகக் குறையும் ஆனால், தற்போது டீசல் விற்பனை நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களிலேயே 5 சதவீதம் சரிந்துள்ளது.

 

பிற எரிபொருள்

பிற எரிபொருள்

இதேபோல் நவம்பர் மாதம் பெட்ரோல் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் விமான எரிபொருள் சுமார் 53 சதவீதம் சரிந்துள்ளது. இதோடு LPG விற்பனையும் 2 சதவீதம் சரிந்துள்ளது.

பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம்

இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்து 4 முறை அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பும், இந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டு நிறுவனங்கள்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பிரிட்டன் BP, பிரான்ஸ் நாட்டின் டோட்டல், ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் ஆகிய நிறுவனங்கள் விருப்பம் தெரிவிக்காத நிலையில், சவுதியின் ஆராம்கோ இந்நிறுவனத்தை 10 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்குவதிற்குத் தயக்கம் காட்டி வருகிறது.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் இந்தியாவின் டீசல் விற்பனை சரிந்துள்ளது பாரத் பெட்ரோலியம் பங்கு விற்பனையைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+