டெல்லி: கூடிய விரைவில் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட் இணைய சேவைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஸ்டார்லிங்க் சேட்டிலைட் நிறுவனம் தங்களுடைய செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் வழங்குவதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளது. அரசு இதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை பயன்படுத்துவது சாத்தியமாகும். இந்த சேவை இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்தால் தடையற்ற இணையவசதியை அனைவரும் பெறலாம்.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் ஜியோ ஏர் பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர் பைபர் ஆகியவை மூலமாக வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்குகின்றன. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் வயர்லெஸ் பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை வழங்கக்கூடிய வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கும் சேட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வயர்லெஸ் பைபர் பிராட்பேண்ட் தேவைகளை வழங்குகிறது. இதற்காக இந்த நிறுவனம் சிறிய ஆன்டனாவை ஆங்காங்கே பொருத்துகிறது. அதிலிருந்து ஏர் பைபர் பாக்ஸில் இருக்கும் ரவுட்டருக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கிறது. இந்த ஜியோ ஏர் பைபர் ஆன்டனாக்கள் அருகில் இருக்கும் மொபைல் டவரில் இருந்து 5ஜி சிக்னல்களைப் பெற்று அதனை வைஃபை ரவுட்டர்கள் வழியாக வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனமும் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு மூலமாக இதே போன்ற ஒரு சேவை வழங்குகிறது. அதாவது 5ஜி மொபைல் டவர்கள் மூலம் சிக்னல்கள் பெறப்பட்டு ஆன்டனாக்கள் மூலம் அவை ரவுட்டர்களுக்கு கிடைக்கின்றன.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தை பொருத்தவரை நேரடியாக சேட்டிலைட்டில் இருந்து ஆன்டனாவிற்கு சிக்னல்கள் வழங்கப்படுகின்றன.
அதாவது இந்த சேவையை பெற பெரும் வாடிக்கையாளரின் வீட்டில் ஒரு ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். இணைய சேவையானது நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து ஆன்டனாவிற்கு சிக்னலை பெற்று வழங்கும். இதற்கு நிலத்தில் எந்த ஒரு பேஸ் ஸ்டேஷன்களும் அமைக்கப்பட வேண்டியதில்லை.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் பூமி சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன, அவற்றிலிருந்து இந்த ஆன்டனாக்கள் சிக்னல்களை பெற்று வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் கனெக்டிவிட்டியை வழங்கும். எனவே இணைய சேவை எந்த ஒரு இடையூறும் இன்றி கிடைக்கும்.
புயல், மழை காலங்களில் கூட இந்த இணைய சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது. அவசர கால நிலையில் கூட இவை செயல்படும் என்பதால் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இணைய சேவை இந்தியாவிற்கு பயன்பாட்டுக்கு வந்தால் பெரும்பாலானவர்கள் அதற்கு மாறி விடுவார்கள் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications