பிச்சையெடுப்பதில் இப்போது பல்வேறு நவீன உத்திகளை பிச்சைக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அசாமின் குவாஹாத்தி-யை சேர்ந்த பார்வையற்ற பிச்சைக்காரர் ஒருவர் தனது கழுத்தில் போன்பே க்யூஆர் கோடு கொண்ட அட்டையைத் தொங்கவிட்டபடி பிச்சை எடுத்து வருகிறார்.
கையில் காசு இல்லாதவர்கள் போன்பே மூலம் காசு தரலாம்.
ஐடியா சூப்பர்ல! அவர் வேறொருவரிடமிருந்து ஆன்லைனில் பணம் பெறும் விடியோ சமூகப் பொருளாதாரத் தடைகளைத் தாண்டுவதற்கான தொழில்நுட்பத்தின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது.

பரபரப்பான குவாஹாட்டியில் ஒரு பிச்சைக்காரர் தனது உதவிக்கான வேண்டுகோளுடன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒருங்கிணைத்து போன்பேயை பயன்படுத்துகிறார்! தொழில்நுட்பத்துக்கு உண்மையிலேயே எல்லையே தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் கௌரவ் சோமானி எகஸ் தளத்தில் ஒரு கிளிப்பை பதிவிட்டார்.
சமூக-பொருளாதார அந்தஸ்தில் உள்ள தடைகளைத் தாண்டிச் செல்லும் தொழில்நுட்பம். கருணை மற்றும் புதுமையின் வளர்ந்து வரும் நிலப்பரப்பைப் பற்றி பேசும் சிந்தனையைத் தூண்டும் தருணம் என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விடியோவில், பிச்சைக்காரர் காரில் இரண்டு பேரை அணுகுகிறார். அவர்களில் ஒருவர் அவருக்கு 10 ரூபாய் அனுப்ப போன்பே க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்கிறார். தனது பெயர் தஷ்ரத் என்று கூறிய பிச்சைக்காரர், அறிவிப்பைக் கேட்க தனது தொலைபேசியை காதுக்கு அருகில் வைத்துள்ளார். அவரது கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த விடியோ சமூக தளங்கலில் வைரலாகி உள்ளது. அவருக்கு ஆதரவாக நிறைய நெட்டிசன்கள் பதிவுகளை குவித்து வருகின்றனர்.
இப்படி போன்பே மூலம் பிச்சைக்காரர் தஷ்ரத் மிக அதிக அளவில் சம்பாதித்துள்ளார். அவரைப் பார்த்து இப்போது நிறைய பிச்சைக்காரர்கள் தஷ்ரத் போலவே போன்பே க்யூஆர் கோடு கொண்ட பலகைகளை ஏந்தி குவாஹாட்டியில் பிச்சை எடுக்கத் தொடங்கி விட்டனர்.
இன்றைய காலத்தில் டெக்னாலஜியை சரியாகப் பயன்படுத்தினால் புத்தசாலித்தனமாக கை நிறைய சம்பாதிக்கலாம் என்பதற்கு பிச்சைக்காரர் தஷ்ரத்தின் வழிமுறை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications