FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்கள் வாகன ஓட்டிகளிடம் அதற்காக சுங்க கட்டணத்தை வசூல் செய்கின்றன. இதற்கு முன்பு டோல் கேட் எனப்படும் சுங்கச்சாவடிகளை நாம் கடந்து செல்லும்போது வாகனத்தை நிறுத்தி பணமாக செலுத்தி மீதமுள்ள தொகையை வாங்கிச் செல்ல வேண்டும். இதன் காரணமாக பல்வேறு சுங்கச்சாவடிகளிலும் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது.

குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் எல்லாம் சுங்கச்சாவடிகளிலேயே பல மணி நேரம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஃபாஸ்டே நடைமுறைக்கு வந்த பிறகு இது முற்றிலுமாக மாறிவிட்டது. சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு இருக்கும். அது நேரடியாக நம்முடைய அந்த வாகன உரிமையாளரின் வங்கி கணக்கோடு தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

குறிப்பிட்ட சுங்கச்சாவடி கடந்து செல்லும்போது தானாகவே அது ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஃபாஸ்டேக் அமல்படுத்தியதில் இருந்து இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பது பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எரிபொருளும் , நேரமும் மிச்சப்படுத்தப்படுள்ளது. இந்த ஃபாஸ்டேக் முறையில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் ஒரு புதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது வாகன ஓட்டிகள் இந்த மாற்றம் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இதன்படி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரொக்க பணமாக சுங்க கட்டணத்தை செலுத்தும் முறை நிறுத்தப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றாலும் அல்லது பேலன்ஸ் இல்லை என்றாலும் உங்கள் வண்டியில் ஃபாஸ்டேக் இல்லை என்றாலும் நீங்கள் பணமாக சுங்க கட்டணத்தை செலுத்த முடியாது. அதற்கு மாற்றாக யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். எனவே உங்கள் வண்டியில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அதில் பேலன்ஸ் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக தனியார் கார், ஜீப் வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் என்பது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் விலை சற்றே உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு 3000 ஆயிரம் ரூபாயாக இருந்த இந்த ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம் தற்போது 3,075 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாஸ் இருந்தால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உங்கள் வாகனத்தை ஓராண்டுக்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தாமல் கடந்து செல்லலாம்.அடிக்கடி நெடுஞ்சாலைகளை பயன்படுத்தக்கூடிய வாகனங்களுக்கு இந்த வருடாந்திர பாஸ் பெரிய அளவிலான பணத்தை சேமித்து கொடுக்கும்.

சுங்க கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் ஏமாற்றுவதை தடுப்பதற்காக ஒரு புதிய மின்னணு கண்காணிப்பு முறையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிற.து இந்த புதிய மின்னணு கண்காணிப்பு முறையில் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படும். இதன் படி ஒரு குறிப்பிட்ட வாகனம் சுங்க கட்டணம் செலுத்த தவறியிருந்தால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் முதலில் ஒரு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும்.

இந்த தகவல் அனுப்பப்பட்ட 72 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட அந்த சுங்க கட்டணத்தை அந்த வாகன உரிமையாளர் செலுத்த வேண்டும். ஒருவேளை 72 மணி நேரமாகியும் அவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் சுங்க கட்டணம் இரட்டிப்பாகும் அதாவது அபராத தொகையாக சேர்த்து கட்ட வேண்டி இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+