தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகின்றது.
அந்த வகையில் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக, தற்போது டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்தியாவில் கொரோனாவின் காரணமாக பல பணிகளும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த முறை டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த சிறப்பு முகாம்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டது வருகின்றது.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை
தேர்தல் கமிஷன் மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டையை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இந்த மின்னணு வாக்காளர் அடையாள் அட்டையை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, உங்களது மொபைல் எண்ணினை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யலாம்.
இந்த டிஜிட்டல் அட்டையில் என்ன இருக்கும்?
இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதோடு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த டிஜிட்டல் அடையாள அட்டை இருக்கும். ஆக உங்களது பதிவு மொபைல் நம்பரை கொண்டு, உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Array
இதே மொபைல் நம்பரை பதிவு செய்யாத வாக்காளர்கள், இதனை பதிவு செய்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதியதாக மின்னணு வடிவில் வாக்காளர் அட்டை டிஜிட்டல் முறையில் பெறும் வாக்காளர், அதனை அட்டையாகவும் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் தாமதம் இருக்காது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில் உங்களது மொபைல் நம்பரை பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளுங்கள். இந்த இணையத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதன் பிறகு தேவையான தகவல்களை கொடுத்து டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
e-EPIC-ஐ பதிவிறக்கம் செய்வது?
வாக்காளர் போர்ட்டல் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் மொபைல் செயலி அல்லது NVSP ஆகியவற்றிலிருந்து e-EPIC -ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். குறிப்பாக http://voterportal.eci.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது NVSP: https://nvsp.in/ , Android : https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen , iOS : https://apps.apple.com/in/app/voter-helpline/id1456535004 என்ற ஆப்பினை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications