இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகின்றது. இந்த நிலையில் தான் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
இந்தியாவில் கொரோனாவின் காரணமாக பல பணிகளும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியது தேர்தல் கமிஷன்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்
கடந்த வாரத்தில் தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள் அட்டையினை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பெற முடிந்தது.
புதிய வாக்காளர்களுக்கு மட்டும்
அதிலும் வாக்காளர் அடையாள அட்டையை மொபைல் நம்பரை அப்டேட் செய்திருந்தவர்கள் மட்டுமே, மொபைல் எண்ணினை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யலாம். அப்படி அப்டேட் செய்யாதவர்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து, பின்னர் டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் கடந்த நவம்பர் டிசம்பரில் பதிவு செய்த புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே, இந்த டிஜிட்டல் சேவை கிடைத்து வந்தது.
இன்று முதல் தொடக்கம்
இந்த நிலையில் தங்களது செல்போன் நம்பரை பதிவிட்ட வாக்காளர்கள், இன்று முதல் (பிப்ரவரி 1) டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதோடு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த அடையாள அட்டை இருக்கும். ஆக உங்களது பதிவு மொபைல் நம்பரை கொண்டு, உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Array
இதே மொபைல் நம்பரை பதிவு செய்யாத வாக்காளர்கள், இதனை பதிவு செய்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதியதாக மின்னணு வடிவில் வாக்காளர் அட்டை டிஜிட்டல் முறையில் பெறும் வாக்காளர், அதனை ஆவண அட்டையாகவும் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் தாமதம் இருக்காது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் பழைய கார்டு வைத்திருப்பவர்களும், டிஜிட்டல் முறையில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உண்மையில் இது பயனுள்ள ஒரு நல்ல விஷயம் தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications