சீனாவின் மத்திய வங்கி வெளியிட்ட டிஜிட்டல் நாணயம் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்று சீன மக்கள் வங்கியின் (PBOC) முன்னாள் அதிகாரி புதன்கிழமை கூறியதாகக் கெய்க்சின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் டிஜிட்டல் யூவான் நாணயத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிள மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மட்டும் சோதனை செய்யப்பட்டது. இதன் விளைவு பெரும் ஏமாற்றத்தை அளித்தாகச் சீன மக்கள் வங்கியின் முன்னாள் அதிகாரி, Xie Ping தெரிவித்தார்.
மேலும் டிஜிட்டல் யுவான் பயன்பாட்டை விரிவுபடுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் நிதியியல் துறை சார்ந்த ஒரு மாநாட்டில் பேசியுள்ளது, அதிர்ச்சி அளித்துள்ளது. ஏன் தெரியுமா..?
கிரிப்டோகரன்சி
உலகளவில் முதல் நாடாக, சீனா பெரிய அளவில் கொண்டாடப்பட்ட கிரிப்டோகரன்சியைத் தடை செய்து, இதற்கு மாறாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்தது. இது மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள் காகித நாணயத்திற்கு மாறாக டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்யத் தயங்கி வந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா-வை விடவும் முன்னோடியாக டிஜிட்டல் யுவான்-ஐ அறிமுகம் செய்தது.
டிஜிட்டல் யுவான்
டிஜிட்டல் யுவான் அறிமுகம் செய்த போது மக்கள் மத்தியில் இதைப் பெரிய அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகப் பல துறையில் பல நிறுவனத்தில் ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளத்தைக் காகித நாணயமாகவும், 50 சதவீதத்தை டிஜிட்டல் யுவான் ஆகவும் அளித்தது.
சீன மக்கள் வங்கி
இந்த நிலையில் சீனாவின் டிஜிட்டல் யுவான் பயன்பாடு குறித்த ஆய்வில் இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் யுவானின் ஒட்டுமொத்த புழக்கம் 100 பில்லியன் யுவான் இது டாலர் மதிப்பில் 14 பில்லியன் மட்டுமே என்று சீன மக்கள் வங்கியின் முன்னாள் அதிகாரி Xie Ping தெரிவித்தார்.
டிஜிட்டல் நாணயங்கள்
டிஜிட்டல் யுவான் பயன்பாடு குறைவாக உள்ளது, மிகவும் செயலற்றதாக உள்ளது என்பதை இந்த அளவை வைத்து எளிதாகச் சொல்ல முடியும் எனவும், டிஜிட்டல் நாணயங்களின் தீர்வுகள் சிறப்பான இல்லை என்று சிங்குவா பல்கலைக்கழகம் நடத்திய டிஜிட்டல் பைனான்ஸ் குறித்த மாநாட்டில் முன்னாள் PBOC ஆராய்ச்சி இயக்குநர் ஜெனரல் Xie Ping பேசியுள்ளார்.
மத்திய வங்கி
ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் காகித வடிவில் இருக்கும் நாணயங்களை, டிஜிட்டல் நாணயங்களாக உருவாக்கி மத்திய வங்கிகளால் பயன்பாட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள் கிரிப்டோகரன்சிகளைப் போலவே இயங்க கூடிய டிஜிட்டல் டோக்கன்களாகும்.
சீனா டாப்பு
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் நாணயங்களின் பயன்பாட்டில் முன்னோடியாக இருக்கும் சீனாவில் போதுமான ஈர்ப்பு மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை எனப் புலம்பி வருவதற்கு மத்தியில், இந்தியாவும் டிஜிட்டல் ரூபாய்-ஐ சோதனை செய்யத் துவங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான Central Bank Digital Currency (CBDC) அமைப்பு தான் டிஜிட்டல் ரூபாயை உருவாக்கியது. இந்த அமைப்பு மொத்த விற்பனை சந்தையில் பயன்படுத்த e₹-W என்பதையும், ரீடைல் சந்தையில் பயன்படுத்த e₹-R என்பதையும் உருவாக்கியுள்ளது.
டிஜிட்டல் ரூபாய் e₹
டிஜிட்டல் ரூபாய் e₹ என்பது ஒரு டோக்கன் போல என்பதால் தற்போது நாம் தினசரி பயன்படுத்தும் 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 2000 ரூபாய் மற்றும் நாணய மதிப்பீட்டில் டோக்கன் உருவாக்கப்பட்டு அதை வங்கிகளின் வாயிலாகப் பரிமாற்றம் செய்யப்படும்.
டிஜிட்டல் ரூபாய் செயல்பாடு
டிஜிட்டல் ரூபாய் என்பது வங்கிகள் தலையீடு இல்லாமல் ஒருவரின் வேலெட்-ல் இருந்து மற்றொரு வருவரின் வேலெட்-க்குச் செல்லும். இதில் வங்கிகளின் தலையீடு இருக்காது ஆனால் நிர்வாகம் செய்யும். அதாவது தற்போது நிஜமாகவே 10 ரூபாய் நோட்டை ஒருவரின் பர்ஸ்-ல் இருந்து எடுத்து மற்றொருவருக்கு அளித்தால், அதை அவர் தனது பர்ஸ்-ல் வைத்துக்கொள்வார்.
வித்தியாசம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் யூபிஐ - ஒரு வங்கி கணக்கிற்கும், மற்றொரு வங்கி கணக்கிற்குமான பரிமாற்றம். ஆனால் டிஜிட்டல் ரூபாய் என்பது வேலெட் - வேலெட் மத்தியிலான பணப் பரிமாற்றம். இதே போல் டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றத்தை வங்கிகள் செய்யாது, CBDC தான் செய்யும்.


Click it and Unblock the Notifications