2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் துறைக்கான சிறப்புத் தனிப் பட்ஜெட் அறிக்கையை 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
Recommended Video
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயத் துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்த பல்வேறு ஊக்க திட்டங்கள், பயிற்சி திட்டங்கள், நிதியுதவி திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு டிஜிட்டல் பேமெண்ட் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வருமான இழப்பு
தமிழ்நாடு பல வகையில், பல துறையில் தனது வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் இதனால் அரசு அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே கூறினார்.
பழனிவேல் தியாகராஜன்
இதைச் சரி செய்ய அனைத்து அரசு மற்றும் அரசு சேவை அளிக்கப்படும் துறையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை இல்லாததும் வரி இழப்பிற்கு முக்கியக் காரணமாக உள்ளது எனப் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம்
இந்த நிலையை மாற்ற விவசாயத் துறையில் முதல் முறையாக 2022-23ஆம் நிதியாண்டு முதல் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அதாவது டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வேளாண் அமைச்சர் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு
டிஜிட்டல் பேமெண்ட் சேவை மூலம் மக்களுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஸ்கேன் பேமெண்ட் சேவைகள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் இந்தியா முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறைகளில் தமிழ்நாடு விவசாயத் துறை முதல் அடியை எடுத்துவைத்துள்ளது. இதன் மூலம் அடுத்தது பிற அனைத்து பிரிவுகளும் இந்த டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படலாம்.
டிஜிட்டல் விவசாயம் திட்டம்
இதோடு விவசாயிகள் விதை முதல் விளை பொருட்கள் வரையில் அனைத்தையும் இணையத்தின் வாங்க ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் திட்டத்தை 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிமுகம் செய்தார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.
மொத்த பட்ஜெட்
2022-23 நிதியாண்டில் வேளாண் பட்ஜெட்டுக்கு சுமார் ரூ. 33007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த வேளாண் பட்ஜெட்டை விட இந்த ஆண்டு 251 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications