வெறும் 10000 முதலீட்டில் துவங்கி 20 பில்லியன் டாலர் சம்பாதித்த திலீப்.. யார் இவர்..?

இந்தியாவின் மிகப் பெரிய பார்மாசூட்டிகல் கம்பெனியாக இன்றைக்கு சன் பார்மா வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் சங்வியின் சாமர்த்தியமான நிர்வாக முடிவுகள்தான் காரணம். நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள திலீப் சங்வியின் நிகர சொத்து மதிப்பு ரூ.20.6 பில்லியன் டாலர்.

சன் பார்மா சாம்ராஜ்ஜியத்தை இன்றைக்கு 5.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருமான ஈட்டும் நிறுவனமாக உயர்த்தியுள்ளார். இப்பேர்பட்ட மாபெரும் நிறுவனத்தை அமைத்த சாதனையாளரான சங்வி ஒரு விளம்பரப்பிரியரல்ல, மீடியா ஃபோகஸில் இருந்து எப்போதுமே விலகி இருப்பார்.

வெறும் 10000 முதலீட்டில் துவங்கி 20 பில்லியன் டாலர் சம்பாதித்த  திலீப்.. யார் இவர்..?

அவரது சுயசரிதையை எழுதிய படைப்பாளியான சோமா தாஸிடம், தன்னிடம் இருக்கும் செல்வத்துடன் தன்னைத் தொடர்பு செய்வதால் ஏற்படும் பிரபலம் மிகவும் சங்கோஜத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இதனால் மும்பையில் பிரபலமாக உள்ள ஒரு தென்னிந்திய ரெஸ்டாரண்ட்டுக்கு சென்று நிம்மதியாக ஒரு பிளேட் இட்லிகூட சாப்பிட முடியவில்லை என்று ஆதங்கப்பட்டாராம். இவர் போன்ற வெகு சிலருக்குத்தான் பணத்தைப் பற்றிய பேராசை இல்லாமல் இருக்கிறது, ஆச்சரியமான விஷயம்தான் இது.

1982இல் தான் இவரது எழுச்சி தொடங்கியது. கொல்கத்தாவில் ஒரு பார்மாசூட்டிகல் டிஸ்ட்ரிபியூட்டராக இருந்த தனது தந்தையிடமிருந்து ரூ.10,000 கடனாகப் பெற்று அதை வைத்து ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை திலீப் சங்வி தொடங்கியுள்ளார்.

பவானிப்பூர் கல்லூரியில் காமர்சில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த சங்விக்கு முறையான தொழில் அனுபவம் கிடையாது. அப்படிப்பட்ட மனிதர் இன்றைக்கு சன் பார்மாவை உலகின் நான்காவது பெரிய ஸ்பெஷாலிட்டி ஜெனரிக்ஸ் பார்மாசூட்டிகல் நிறுவனமாக நிலை நிறுத்தி வியக்க வைத்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சன்பார்மா இயங்குகிறது.

குறிப்பிடத்தக்க கையகப்படுத்துதல் மூலம் சன் பார்மாவை உலகளவில் அவர் விரிவுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் டெட்ராய்ட்டை சேர்ந்த Caraco Pharma என்ற நிறுவனத்தை 1997இல் அவர் வாங்கியது அவரது தொழிலில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து இஸ்ரேலைச் சேர்ந்த Taro Pharma-வை வாங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக 4 பில்லியனுக்கு போட்டி நிறுவனமான ரான்பாக்ஸி லேபாரேட்டரீஸை 2014ல் வாங்கினார். இதன் இந்திய மதிப்பு ரூ.33,306 கோடியாகும்.

பின்னர் 2023 மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸை சேர்ந்த Concert Pharmaceuticals-ஐ 576 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதால் சன் பார்மா மிக வலுவான நிறுவனமாக உருவெடுத்தது.

இதனிடையே 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அரசின் நெருக்கடிகளால் சன் பார்மாவின் வருமானம் சில சவால்களைச் சந்தித்தபோதும் விரைவிலேயே சங்வியின் தலைமையில் மீண்டெழுந்தது.
சன் பார்மா கம்பெனியின் வருவாய் 2018 நிதியாண்டில் ரூ.26,065.9 கோடியில் இருந்து 2023 நிதியாண்டில் ரூ.43,278.9 கோடியாக உயர்ந்துவிட்டது.

இந்த வளர்ச்சி படிப்படியாக நிகழவில்லை. மளமளவென அதிகரித்த இமாலய வளர்ச்சியாகும். பார்மாசூட்டிகல் துறையில் சங்வியின் குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டும் வகையில் அவருக்கு 2016இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

போர்ப்ஸ் மதிப்பின் படி சங்வி மற்றும் அவரது குடும்பத்தினரின் நிகர சொத்து மதிப்பு 19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சங்விக்கு விபா என்ற மனைவியும் ஆலோக், விதி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். தனிப்பட்ட முறையில் சங்விவியின் நிகர மதிப்பு 18.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் இது ரூ.15.65 லட்சம் கோடியாகும். இதன் மூலம் அவர் நாட்டின் 8வது பெரும் பணக்காரராகவும் உலகளவில் 87ஆவது பெரும் பணக்காரராகவும் உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+